எப்படி Microwave oven இல்லாமல் Cookies செய்வது என்று பார்ப்போம்
பொதுவா பிஸ்கட் (jam Cookies) செய்ய வேண்டும் என்றால் மைக்ரோ ஓவன்-ல் தான் செய்ய முடியும் அல்லவா? இனி மைக்ரோ ஓவன் வேண்டாம், அனைவரது வீட்டிலும் இருக்கும் அலுமினியம் பாத்திரத்தை கொண்டு, மிகவும் எளிதாக Jam Cookies எப்படி செய்ய வேண்டும், என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.
சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படித்து Jam Cookies பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Jam Cookies பிஸ்கட் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்:
- வெண்ணெய் – 100 கிராம்
- சர்க்கரை பவுடர் – கிராம்
- மைதாமாவு – ஒரு கப்
- பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
- சிறிதளவு – உப்பு
- FRUIT JAM – தேவையான அளவு
(Cookies Without Oven) பிஸ்கட் செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்திக்கொள்ளவும் அவற்றில் 100 கிராம் வெண்ணெயை சேர்த்து Egg Beater கொண்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.
பின்பு அவற்றில் 100 கிராம் சர்க்கரை பவுடர் சேர்த்து திரும்பவும் Egg Beater கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
பிறகு அவற்றில் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, அதன் பிறகு 1 1/2 டேபிள் ஸ்பூன் காச்சிய பால் சேர்த்து நன்றாக மாவை பிசைந்து கொள்ளவும்.
மாவை நன்றாக பிசைந்த பிறகு பிரிட்ஜியில் ஒரு 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்பு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
பின்பு ஒரு அலுமினியம் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும், அவற்றில் வெண்ணெய் அல்லது நெய் தடவி இந்த உருண்டைகளை வைத்து உங்கள் பெருவிரலால் லேசாக அழுத்த வேண்டும்.
அதன் பிறகு அவற்றில் FRUIT JAM சிறிதளவு வைக்கவும்.
இப்போது அடுப்பில் ஒரு பெரிய அலுமினியம் பாத்திரத்தை வைத்து கல் உப்பு கொட்டி 20 நிமிடம் வரை உப்பை சூடுபடுத்தவும், உப்பு சூடுஏறியதும் அவற்றில் ஒரு ஷ்டாண்டு (STAND) வைத்து, ஏற்கனவே அலுமினியம் பாத்திரத்தில் செய்துவைத்த உருண்டைகளை, இந்த அலுமினியம் பாத்திரத்தில் உள்ளே அப்படியே வைத்து ஒரு மூடியை கொண்டு சுமார் 25 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் அடுப்பை வைத்து வேகவைக்க வேண்டும். அவ்வளவு தான் Jam Cookies Recipe தயார்.
ஓவன் இல்லாமல் வீட்டில் மிக எளிதாக Jam Cookies செய்வதற்கு இது ஒரு சிறந்த முறையாகும்.
Jam Cookies நன்றாக ஆறியதும் அவற்றை பாத்திரத்தில் இருந்து எடுத்து அனைவருக்கும் பரிமாறவும்.
பிரஷர் குக்கர் வேண்டாம், மைக்ரோ ஓவன் வேண்டாம் கேக் செய்யலாம் வாங்க..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.