வீட்டிலேயே கேக் செய்வது எப்படி?
பொதுவா கேக் செய்ய வேண்டும் என்றால் மைக்ரோ ஓவன் அல்லது பிரஷர் குக்கர் இவை இரண்டில் ஏதேனும் ஒன்று ஒருந்தால் தான் கேக் செய்ய முடியும் அல்லவா.? இனி மைக்ரோ ஓவன் வேண்டாம், பிரஷர் குக்கர் வேண்டாம் நாம் அனைவரது வீட்டிலும் இருக்கும் இட்லி பாத்திரத்தை கொண்டு, மிகவும் எளிதாக சாக்லேட் கேக் (cake recipes) எப்படி செய்ய வேண்டும், என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.
தேவையான பொருட்கள்:
- மைதாமாவு – 1 1/2 கப்
- கோகோ பவுடர் – தேவையான அளவு
- வெண்ணிலா எசன்ஸ் – தேவையான அளவு
- தயிர் – முக்கால் கப்
- பசும் பால் – 100 மில்லி
- fresh cream – 100 மில்லி
- வெண்ணெய் – 50 கிராம்
- உப்பு – ஒரு சிட்டிகை
- சர்க்கரை – முக்கால் கப்
- சர்க்கரை பவுடர் – தேவையான அளவு
- எண்ணெய் – 1/2 கப்
- பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்
செய்முறை:
இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அவற்றில் முக்கால் கப் தயிர், முக்கால் கப் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.
சர்க்கரை தயிரில் நன்றாக கரைந்த பிறகு அவற்றில் 1/2 கப் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பின்பு ஒரு சல்லடையை எடுத்து கொள்ளவும். அவற்றில் 1 1/2 கப் மைதா மாவு, 1/4 கப் கோகோ பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக சலித்து கொள்ளவும்.
கட்டிகள் இல்லாமல் சலித்தப்பிறகு இந்த கலவையை கலந்து வைத்துள்ள, தயிர் கலவையில் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
கலவை கெட்டியாக இருந்தால் 1/4 கப் அளவிற்கு நன்றாக காய்ச்சிய பசும் பாலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதாவது கலவை கெட்டியாகவும், இருக்க கூடாது அதேபோல் கலவை தண்ணியாகவும் இருக்க கூடாது. கலவையை சரியான நிலையில் கலக்கவும்.
பின்பு ஒரு கேக் டின்னில் வெண்ணெய் தடவி இந்த கலவையை அவற்றில் சேர்த்து காற்று புகாத அளவிற்கு சில்வர் கவரை கொண்டு மூட வேண்டும்.
பின்பு கேக் டின்னை இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சாதாரணமாக இட்லி தட்டின் மேல் இந்த கேக் டினை வைத்து மூடி விட்டு, 70 நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.
கேக் வெந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ள, ஒரு குச்சியை விட்டு அந்த கேக்கில் விட்டு பார்க்கவும்.
கேக் குச்சியில் ஒட்டாமல் இருந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம், இல்லை குச்சில் கேக் ஒட்டிக்கொண்டு இருந்தால், திரும்ப ஒரு 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.
தங்களது வீட்டில் கேக் டின் இல்லை என்றால் பரவாயில்லை. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள கலவையை அவற்றில் சேர்த்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
அவ்வளவுதான் கேக் (cake recipes) தயார். இந்த கேக் நன்றாக ஆறிய பிறகு, கேக் டின்னில் இருந்து எடுக்கவும், அப்போது தான் கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக வரும்.
Microwave Oven இல்லாமல் Cookies எப்படி செய்வது
இப்போது கேக்கை அழகுபடுத்த கிரீம் எப்படி செய்வது என்று பார்ப்போம்..!
ஒரு பாத்திரத்தில் 50 கிராம் வெண்ணெயை எடுத்து கொள்ளவும், அவற்றை egg beater கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும், பின்பு அவற்றில் 1 கப் சர்க்கரை பவுடர், கால் கப் கோகோ பவுடர், 100 கிராம் fresh cream அல்லது 100 மில்லி காய்ச்சிய பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அவ்வளவு தான் கிரீம் தயார். இவற்றை வெண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளதால் சிறிது வெப்பம் பட்டாலோ அல்லது சிறிது நேரம் வெளியே இருந்தாலும் உருகி விடும் எனவே கேக் தயார் ஆகும் வரை பிரிட்ஜியில் வைத்திருக்கவும்.
பிறகு கேக் நன்றாக ஆறியதும் இந்த கிரீமை கேக்கின் மீது தடவி, அவற்றில் மேல் சில ஜெரி பழத்தை வைத்து ஒரு 15 நிமிடங்கள் வரை பிரிட்ஜியில் வைத்திருக்கவும்.
பின்பு பிரிட்ஜியில் இருந்து கேக்கை எடுத்தோம் என்றால் மிகவும் சுவையுள்ள சாக்லேட் கேக் (cake recipes) தயார்.
இப்போது அனைவருக்கும் பரிமாறவும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |