செட்டிநாடு ஸ்டைலில் பச்சைமிளகாய் சட்னி செய்து பாருங்கள்..! 2 தோசை கூட சாப்பிடுவீங்க..!

Advertisement

How to Make Green Spicy Chutney in Tamil

நண்பர்களே உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான சமையல் சாப்பிட்டு விட்டு போர் அடைத்துவிட்டது அல்லவா..? வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்று  சாப்பிடுவீர்கள் அல்லவா..? அப்படி வீட்டைவிட்டு வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட்டால் அங்கு செட்டிநாடு குருமா, செட்டிநாட்டு பிரியாணி என்று அனைத்தும் செட்டிநாடு சார்ந்து சொல்வார்கள். அப்படி என்ன தான் இருக்கிறது என்று சொல்லி அதையும் வாங்கி சாப்பிடுவோம். அப்போது தான் நமக்கு அதில் இருக்கும் உணவுகளின் ருசி தெரியும்..!

How to Make Green Spicy Chutney in Tamil:

பச்சை மிளகாய்- 8
சின்ன வெங்காயம்- 10
துருவிய தேங்காய்- 1/4 கப்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 1 ஸ்பூன்
வெல்லம் – 1/2 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
பூண்டு- 10 பற்கள்
இஞ்சி- 1 இன்ச்
பெருங்காயத் தூள்- 1/2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
எண்ணெய் -தேவையான அளவு

தேங்காய், தக்காளி சேர்க்காத மதுரை நீர் சட்னி செஞ்சி பாருங்க 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க

செய்முறை:

1 மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொண்டு ஒன்றுக்கு இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் சீரகம் சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அதன் பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். பிறகு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  வதங்கியதும் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அதனையும் நன்கு வதக்கவும். வதங்கியதும் அதில் பெருங்காய தூள் சிறிது போட்டு இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து மிக்சி ஜாரில் வெல்லம், உப்பு சேர்த்து வதங்கியதும் அதனை அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளவேண்டும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய், கடுகு சேர்த்து தாளித்து சட்னியை போட்டு தாளித்து தேவையான அளவு  தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவும். அளவு தான் செட்டிநாடு சட்னி ரெடி.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement