சப்போட்டா அல்வா செய்வது எப்படி?
வணக்கம் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பில் சுவையான சப்போட்டா அல்வா செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம். அல்வா என்று சொன்னாலே அனைவருக்கும் பிடிக்கும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகிற அல்வா கொஞ்சம் புதிதாக இருக்கும். ஒரே மாதிரி அல்வா செய்து கொடுத்து அலுத்துபோகிறுக்கும் தாய்மார்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சப்போட்டா பழத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள் அதனால் அவர்களுக்கு நீங்கள் அல்வா செய்து கொடுக்கலாம். சுவையான சப்போட்டா அல்வா செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டு உங்க வீட்டிலும் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க..!
சுவையான ஜவ்வரிசி கேசரி செய்வது எப்படி…?
சப்போட்டா அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
- சப்போட்டா பழம் – 1/4 கிலோ
- வெல்லம் – 1 கப்
- ரவை – 1/2 கப்
- முந்திரி – 10
- நெய் – 2 தேக்கரண்டி
சப்போட்டா அல்வா செய்முறை விளக்கம்:
ஸ்டேப்-1
முதலில் நன்றாக பழுத்த சப்போட்டா பழத்தை எடுத்துக்கொண்டு அதன் மேல் உள்ள தோலை சீவிக்கொண்டு பிறகு அதிலுள்ள சப்போட்டா கொட்டையை எடுத்துவிட்டு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல் நன்றாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஸ்டேப்-2
அதன் பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை போட்டு பொன் நிறமாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். பிறகு முந்திரி வறுத்த பாத்திரத்தில் 1/2 கப் ரவை கொட்டி நன்றாக வாசம் வரும் வரை வறுக்கவேண்டும்.
ஸ்டேப்-3
ரவை நன்றாக வறுபட்டவுடன் 1/2 கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி ரவை கெட்டியாகாமல் கலந்து விடுங்கள். ரவை வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள சப்போட்டா பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
ஸ்டேப்-4
சப்போட்டா பேஸ்ட்டை கலந்த பிறகு வெல்லம், நெய் இரண்டையும் சேர்த்து ஒரு 10 நிமிடம் இப்படியே கிளறி கொண்டே இருந்தால் போதும் வெல்லம், ரவை, சப்போட்டா பழம் பேஸ்ட் எல்லாம் சேர்ந்து சுருண்டு அல்வா பதத்திற்கு வந்துவிடும்.
ஸ்டேப்-5
இதற்கு மேல் வறுத்து வைத்துள்ள முந்திரியை அல்வா மீது போட்டு இறக்கி விடலாம். அவ்வளவு தான் நீங்கள் எதிர்பார்த்த சுவையான சப்போட்டா அல்வா தயார். அதில் சர்க்கரை சேர்க்காததால் பெரியவர்களுக்கும் இந்த அல்வாவினை கொடுக்கலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |