பின்னல் பணியாரம்
நண்பர்களே வணக்கம் இன்றைய சமையல் குறிப்பு பதிவில் அனைவருக்கும் தீபாவளியை முன்னிட்டு அனைவரின் வீட்டிலும் பலகாரம் செய்துகொண்டு இருப்பீர்கள். ஆனால் வருடம் வருடம் ஒரே மாதிரியான பலகாரம் செய்து உங்களுக்கு போர் அடிச்சிருக்கும் வீட்டில் இருக்கும் நபர்களுக்கும் போர் அடித்திருக்கும்.
நாம் எவ்வளவு தான் செய்தாலும் அதனை 15 நாட்களுக்கு மேல் சுவைக்க முடியாது. நாம் எப்போதும் செய்யும் பலகாரம் எந்த நேரத்திலும் சாப்பிட முடியாது. அது கொஞ்சம் கஷ்டம் வெறுப்பாக இருக்கும் சாப்பிட்டும் போதே திகட்டி விடும். அதனால் தான் சாப்பிடும் போது திகட்டாமல் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடக்கூடிய இந்த ஸ்பெஷல் பலகாரத்தை செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் வாயிலாக பார்ப்போம்..!
இஞ்சிக்கொத்து செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
- 2 கப் மைதா
- 3/4 கப் அரைத்த சர்க்கரை
- சிறிதளவு உப்பு
- நெய் – தேவையான அளவு
ஸ்டேப்: 1
- முதலில் அடிகனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் 2 கப் மைதாவை சேர்த்து அதில் நெய் சேர்த்துக்கொள்ளவும்.
- சேர்த்த பின் அதனை நன்கு கலந்துகொள்ளவும்.
ஸ்டேப்: 2
பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து மூன்றையும் நன்கு கலந்து கொள்ளவும். அதில் சுவைக்காக உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
நன்கு கலந்தவுடன் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். அதன் பின் சப்பாத்தி மாவு போல் வரும் வரை அடித்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 4
ஒரே உருண்டையாக பிடித்துவைத்திருப்பீர்கள். அதனை சம அளவு பிரித்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 5
இப்போது பிரித்து வைத்திருந்த மாவை ஒரு அகலமான தட்டில் சப்பாத்தி போல் தேய்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 6
கடைசியாக ஒரு கூர்மையான கத்தியை கொண்டு பாக்ஸ் பாக்சாக கட் செய்துகொள்ளவும்.
ஸ்டேப்: 7
நறுக்கி வைத்த மாவை எடுத்து அதில் உங்களுக்கு என்ன வடிவத்திலும் வேண்டுமோ அதனை போல் நறுக்கி கொள்ளவும்.
ஸ்டேப்: 8
இதை போல் அனைத்து மாவில் செய்த பிறகு ஒரு கடாயை எடுத்து அதில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும். அதற்குள் நீங்கள் கட் செய்து வைத்த மாவு காய்த்து விடும். அதன் பின் அதனை எடுத்து எண்ணெய்யில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
இதனை தீபாவளி முடிந்து 20 நாட்களுக்கு மேல் டீ குடிக்கும் நேரத்தில் அதில் நனைத்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
இதில் அதிகளவு எண்ணெய் இருக்காது குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கும் கொடுத்துவிடலாம். மறந்திடாமல் தீபாவளிக்கு இதை செய்திடுங்கள்.
தீபாவளிக்கு இந்த மாதிரி நெய் மைசூர் பாக் செஞ்சு சாப்பிட்டு பாருங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |