ஐயர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி.?

Advertisement

ஐயர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி.?

சுப நிகழ்ச்சி வீடுகளில் மதியம் சாப்பாடு சாப்பிடும் போது முதலில் சாம்பார் அடுத்து வத்த குழம்பு தான். இந்த வத்த குழம்பு நிறைய நபர்களுக்கு பிடித்தமான குழம்பாக இருக்கிறது. இதில் எந்த விதமான காய்கறிகளும் சேர்க்காமல் வெறும் வத்தலை போட்டு வைத்தால் அவ்வளவு ருசியாக இருக்கிறது. அதிலும் ஐயர் வீட்டில் சமைக்கும் உணவுகள் மிகவும் பிடிக்கும். அதில்  இந்த வத்த குழம்பு எப்படி செய்வார்கள் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  1. மணத்தக்காளி வத்தல் இல்லையென்றால் உங்கள் வீட்டில் உள்ள வத்தல்- 10
  2. தக்காளி- 2
  3. பூண்டு- 6 பற்கள்
  4. புளி- இரு எலுமிச்சை அளவு
  5. மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி
  6. மல்லி தூள்- 2 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் –1/2 தேக்கரண்டி
  8. பெஞ்சீரகம்- 1 தேக்கரண்டி
  9. வெந்தயம் – 1 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை – சிறிதளவு
  11. உப்பு – தேவையான அளவு
  12. மிளகு- 1 தேக்கரண்டி

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு இப்படி செஞ்சு பாருங்க..! நாவில் எச்சு ஊறும்..!

வத்த குழம்பு செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வத்தலை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

அதே கடாயில் வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவை சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனுடனே கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

vatha kulambu recipe

வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், பூண்டு மற்றும் மிளகு சிறிதளவு சேர்த்து நச்சு எடுத்ததையும் சேர்த்து வதக்கவும். அதனுடனே புளி தண்ணீர் சேர்க்க வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

vatha kulambu recipe

ஒரு 20 நிமிடம் கழித்து பார்த்தால்  குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்த நிலையில் வந்திருக்கும், முப்பது அடுப்பை அணைத்து விடவும். அவ்ளோ தாங்க ஐயர் வீட்டு வத்த குழம்பு தயார்.!

5 நபர்களுக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மாற்றம் அளவுகள் தெரியுமா.?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement