ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே செய்யலாம் | Rottu Kadai Kalan Recipe In Tamil

ரோட்டுக்கடை காளான் | Kaalan Recipe in Tamil

Street Food பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது. அதிலும் பாணி பூரி, நூடுல்ஸ், காளான் எல்லாம் அறுசுவையான சாப்பாட்டில் ஒன்று. பள்ளி, கல்லூரி வகுப்புகளை முடித்து விட்டு வரும் வழியில் இதை சாப்பிடாமல் யாரும் வீட்டிற்கு வர மாட்டார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவுகளில் ஒன்றான காளானை வீட்டிலேயே எப்படி ருசியாக செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

roadside kaalan recipe in tamil

 1. காளான் – தேவையான அளவு
 2. முட்டைகோஸ் – பாதியளவு
 3. மைதா – 4 டேபிள் ஸ்பூன்
 4. Corn Flour – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
 5. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
 6. கரம் மசாலா – அரை டேபிள் ஸ்பூன்
 7. உப்பு – தேவையான அளவு
 8. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 9. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
 10. எண்ணெய் – தேவையான அளவு

வதக்குவதற்கு தேவையான பொருட்கள்: 

 1. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
 2. கருவேப்பிலை – 1 கொத்து (நறுக்கியது)
 3. வெங்காயம் – 2 (நறுக்கியது)
 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
 5. தக்காளி சாஸ் – 8 டேபிள் ஸ்பூன்
 6. Green Chilly sauce – 1 டேபிள் ஸ்பூன்
 7. மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
 8. உப்பு – தேவையான அளவு
 9. Corn Flour – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப்: 1

Kaalan Recipe in Tamil

Kaalan Recipe in Tamil: முதலில் பாதியளவு முட்டைகோஸை எடுத்து அதனை மெல்லியதாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின் காளானை தண்ணீரில் கழுவி நறுக்கி வைத்து கொள்ளவும். முட்டைகோஸ் மற்றும் காளான் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளவும்.

ஸ்டேப்: 2

Kaalan Recipe in Tamil

Roadside Kaalan Recipe in Tamil: பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் மைதா, ஒன்றரை டேபிள் ஸ்பூன் Corn Flour, 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், அரை டேபிள் ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

ஸ்டேப்: 3

Kaalan Recipe in Tamil: அதன் பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். (பக்கோடாவிற்கு பிசைவது போல மிக்ஸ் பண்ணவும்).

ஸ்டேப்: 4

ரோட்டுக்கடை காளான்

பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு பிசைந்து வைத்திருக்கும் மாவை சின்ன சின்னதாக பக்கோடா போல உருட்டி வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.

காளான் கிரேவி செய்வது எப்படி?

 

ஸ்டேப்: 5

Rottu Kadai Kalan Recipe In Tamil: பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய கருவேப்பிலை 1 கொத்து, நறுக்கிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.

ஸ்டேப்: 6

roadside kaalan recipe in tamil

Kaalan Recipe in Tamil: பின் அதில் 8 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ், 1 டேபிள் ஸ்பூன் Green Chilly sauce, அரை டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும். பின் அதில் 300 ml தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

ஸ்டேப்: 7

 • Rottu Kadai Kalan Recipe In Tamil : பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் Corn Flour மாவு எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து அதனை கொதித்து கொண்டிருக்கும் கடாயில் ஊற்றவும். பின் அதில் வறுத்து வைத்திருக்கும் காளான், முட்டைகோஸை சேர்த்து கிண்டவும்.
 • பின்னர் இதனை இன்னொரு பாத்திரத்தில் மாற்றி நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்தால் சுவையான ரோட்டுக்கடை காளான் தயார்.
காளான் பிரியாணி செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்