கருவேப்பிலை பொடி அரைப்பது எப்படி | Karuveppilai Powder Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே..! இட்லி தோசை என்றால் முதலில் அம்மாவிடம் கேட்பது பொடி இருக்கா என்பதுதான். என்னதான் விதவிதமான சட்னி இருந்தாலும் அம்மா அரைக்கும் பொடி போல் வருமா..! பொடி என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் கறிவேப்பிலை பொடி என்றால் எப்படி இருக்கும். வாங்க சூப்பரான சுவையான மனம் மணக்கும் கறிவேப்பிலை பொடியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- கருப்பு உளுந்து – 1/4 கப்
- கடலை பருப்பு – 1/4 கப்
- வெள்ளை எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்
- மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
- கட்டி பெருங்காயம் -2 துண்டு
- கல் உப்பு – 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 7
- புளி – 2 துண்டு
- கருவேப்பிலை – 2 கப்
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
இட்லி பொடிய இப்படி செஞ்சி பாருங்க |
கறிவேப்பிலை பொடி செய்யும் முறை:
ஸ்டேப்: 1
- முதலில் அடுப்பில் கடாயை வைத்து மிதமான சூட்டில் கருப்பு உளுந்து 1/4 கப் சேர்த்து 5 நிமிடம் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
- பின் கடாயை வைத்து கடலை பருப்பு -1/4 கப் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் வெள்ளை எள்ளு சேர்த்து இரண்டையும் மிதமான சூட்டில் வறுக்கவும்.
ஸ்டேப்: 3
- பின் கடாயை வைத்து மல்லி விதையை வறுத்து எடுத்துகொள்ளவும்.
ஸ்டேப்: 4
- தனியாக கட்டி பெருங்காயம் -2 துண்டு, உப்பு சேர்த்து வறுக்கவும்.
ஸ்டேப்: 5
- வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதனுடன் காய்ந்த மிளகாய் 10 சேர்த்து மிதமான சூட்டில் வார்க்கவும்.
- பிறகு தனியாக புளியை வறுத்து எடுத்துகொள்ளவும்.
ஸ்டேப்: 6
- கருவேப்பிலையை நன்கு கழுவி எடுத்து வைத்துகொள்ளவும். எடுத்து வைத்த கருவேப்பிலையை வாணலியில் சேர்த்து நன்கு வறுத்துகொள்ளவும். கடைசியாக வறுத்த எல்லா பொருட்களையும் சூடு தனியும் வரை ஆற வைக்கவும்.
சாட் மசாலா பொடி செய்வது எப்படி |
ஸ்டேப்: 7
- ஆறிய பின் முதலில் மிளகாயை மிக்சியில் போட்டு அரைக்கவும், அரைத்த பின் அதனுடன் கடலை பருப்பு, உளுந்து சேர்த்து அரைக்கவும்.
- பின் மல்லி விதை, கட்டி பெருங்காயம், கல் உப்பு, புளி, கருவேப்பிலை சேர்த்து ஓரளவு அரைத்து கொண்டால் போதும்
- இப்போது ருசியான, சுவையான, ஐயர் வீட்டு கருவேப்பிலை பொடி ரெடி. நீங்கள் இட்லி தோசை சாப்பிடும் பொழுது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |