தென்னிந்திய ஸ்பெஷல் மக்ரோனி செய்யும் முறை..!

மக்ரோனி செய்யும் முறை

தென்னிந்திய ஸ்பெஷல் மக்ரோனி செய்யும் முறை (Macaroni Recipes In Tamil)..!

குழந்தைகளுக்கு பொதுவாக மேக்ரோனி உணவுகள் மிகவும் பிடிக்கும் அதை விரும்பியும் அதிகமாக சாப்பிடுவார்கள், சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட இதனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய மக்ரோனி செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

 1. தண்ணீர்-1 லிட்டர்
 2. உப்பு – தேவைக்கேற்ப
 3. மேக்ரோனி- 2 கப்
 4. வெஜிடபிள் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
 5. கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
 6. கறிவேப்பிலை – 10-12
 7. மீடியம் வடிவ வெங்காயம், நறுக்கியது – 1
 8. சிறிய வடிவில் பச்சை மிளகாய் (நறுக்கியது) – 1-2
 9. பீன்ஸ் (சதுர வடிவில் நறுக்கியது மற்றும் வேக வைத்தது ) – 1/4 கப்
 10. சாம்பார் மசாலா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 11. வெஜ் மயோனைஸ் – 5 டேபிள் ஸ்பூன்

மக்ரோனி செய்யும் முறை (Macaroni Recipes In Tamil) STEP: 1

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பவும் மிதமான தீயில் அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

அதனுடன் உப்பு மற்றும் மேக்ரோனி இரண்டையும் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். மேக்ரோனி, பாத்திரத்தின் அடியில் ஒட்டாத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

மக்ரோனி செய்யும் முறை STEP: 2

பின்பு ஒரு வடிகட்டியை கொண்டு வேகவைத்த மேக்ரோனியில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

இப்பொழுது, மற்றொரு கடாயை எடுத்து கொள்ளவும். அவற்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், கடுகு நன்றாக வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், காலிபிளவர், சாம்பார் மசாலா, கொஞ்சம் உப்பு சேர்க்க வேண்டும்.

மக்ரோனி செய்யும் முறை STEP: 3

பின்பு நன்றாக கிளறி ஒரு நிமிடம் வரை காய்கறிகளை வேக வைக்கவும். இப்பொழுது இதனுடன் வேகவைத்த மேக்ரோனியை சேர்க்க வேண்டும்.

பின்பு நன்றாக கிளறவும் பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் மயோனைஸ் சாஸ் சேர்த்து கிளறவும், பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து 1 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து கலவை கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

மக்ரோனி செய்யும் முறை STEP: 4

இதனுடன் சமைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறவும். அவ்வளவு தான் மேக்ரோனி ரெசிபி தயார். இவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிமாறவும்.

சுவையான பன்னீர் புலாவ் செய்வது எப்படி???
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!