இட்லியை வைத்து யாராவது இப்படி செஞ்சு சாப்பிட்டுருக்கீங்களா.!

masala idli seivathu eppadi

மசாலா இட்லி செய்வது எப்படி.?

இட்லி, தோசை என்றால் பிடித்தமான ஒரு உணவு. அதிலும் தோசை என்றால் அப்ப அப்ப ஊத்தி சாப்பிடுவோம். ஆனால் இட்லி என்றால் ஊத்தி வைத்திடுவோம். அப்படி ஊத்தி வைக்கும் இட்லிகள் சில நேரம் மீந்து விடும். அதனை பெரும்பாலும் உப்புமா வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் மீந்து போன இட்லியை மசாலாவாக செய்யலாம் என்று எத்தனை பேருக்கு தெரியும். எனக்கு மசாலா இட்லி செய்ய தெரியும் என்றால் நமது பதிவில் நிறைய சமையல் குறிப்புகளை பதிவிட்டுள்ளோம். அதனை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். மசாலா இட்லி செய்ய தெரியாது என்பவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மசாலா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

 1. இட்லி -4
 2. வெங்காயம் –1
 3. பெருஞ்சீரகம் –1/2 தேக்கரண்டி
 4. கடுகு- 1தேக்கரண்டி
 5. கருவேப்பிலை- ஒரு கைப்பிடி
 6. மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
 7. கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
 8. மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
 9. மஞ்சள் தூள் –1/4 தேக்கரண்டி
 10. உப்பு – தேவையான அளவு
 11. எண்ணெய்- தேவையான அளவு
 12. இஞ்சி பூண்டு பேஸ்ட் -சிறிதளவு

5 நிமிடத்தில் செய்ய கூடிய ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி..!

செய்முறை:

முதலில் 4 இட்லியை எடுத்து சிறிய சிறியதாக கட் செய்து வைத்து கொள்ளவும்.

மசாலா இட்லி செய்வது எப்படி

அடுத்து கடாய் வைத்து பொரிக்கின்ற அளவிற்கு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கட் செய்து வைத்துள்ள இட்லியை வைத்து பொரித்தெடுக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து பொரிந்ததும், பெருஞ்சீரகம் சேர்க்கவும்.

பின் அதில் காய்ந்த மிளகாய் 2, ஒரு  கொத்து கருவேப்பிலை, நறுக்கிய  பெரிய வெங்காயம் 1 சேர்த்து வதக்கவும், அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

பின் அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், சீரக தூள் 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சிரியதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

மசாலா இட்லி செய்வது எப்படி

அதில் பொரித்து வைத்திருக்கின்ற இட்லியை சேர்த்து வதக்கவும். அதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து வதக்கவும்.  அதனுடன் மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கி விடவும். அவ்ளோ தாங்க சுவையான மசாலா இட்லி ரெடி.!

தோசைக்கல்லில் மசாலா இட்லி செய்வது எப்படி? வாங்க அதையும் செய்து பார்ப்போம்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil