ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி நிறைய இருக்கா அப்போ மழைக்கு இதமாக இந்த டிஷ் பண்ணுங்க..!

Advertisement

Masala Pori Recipe in Tamil

வணக்கம்.. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைக்கு வாங்கிய பொரி நிறைய இருக்கிறதா. அதை எப்படி காலிசெய்வது என்று யோசிச்சிகிட்டு இருக்கீங்களா.. அப்படின்னா இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்காக மட்டுமே. ஆம் நண்பர்களே பொரியை வைத்து அருமையான சுவையில் மசாலா பொரி எப்படி செய்யலாம் என்பதை பற்றி தான் நாம் இப்பொழுது தெளிவாக பார்க்க போகிறோம். செய்முறை விளக்கத்தை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பொரி – 1 1/2 கப்
  • வரமிளகாய் – இரண்டு
  • கடுகு – 1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • பெருங்காய தூள் – இரண்டு சிட்டிகை
  • உப்பு – தேவைக்கேற்ப
  • சாட்மசாலா – 2 சிட்டிகை
  • தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
  • பொட்டுக்கடலை – 1/2 கப்
  • வறுத்த வேர்க்கடலை – 1/2 கப்
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • பூண்டு – நான்கு பற்கள் (இடித்தது)
  • பொடித்த சக்கரை – 1/2 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – நறுக்கியது சிறிதளவு
  • தக்காளி – நறுக்கியது சிறிதளவு
  • மிச்சர் – சிறிதளவு

மசாலா பொரி செய்முறை:

  • மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • முதலில் அடுப்பில் ஒரு அகலமான வாணலியை வைத்து அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் நன்கு சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்க்கவும்.
  • கடுகு நன்கு பொரிந்து வந்தது இடித்து வைத்துள்ள பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பூண்டு ஓரளவு சிவந்து வந்ததும் அவற்றில் இரண்டு வரமிளகாவை உடைத்து சேர்க்கவும் பிறகு நன்றாக வதக்கிவிடவும்.
  • பிறகு 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
  • பின்பு 1/2 கப் பொட்டுக்கடலை, 1/2 கப் வறுத்த வேர்க்கடலை, 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.
  • இவை அனைத்தையும் நன்றாக வதக்கியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.
  • பிறகு பொடித்த சக்கரை 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறிவிடுங்கள்.
  • அதன் பிறகு 1 1/2 கப் பொரி சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள் 2 நிமிடம் கிளறிவிட்டாலே போதும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி சிறிதளவு சாட்மசாலா தூவி விடுங்கள்.
  • இறுதியாக இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், நறுக்கிய பெரிய வெங்காயம் சிறிதளவு, தக்காளி சிறிதளவு, கொத்தமல்லி இலை சிறிதளவு, மிச்சர் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள். அவ்வளவு தன மசாலா பொரி தயார் இப்பொழுது அனைவருக்கும் பகிர்த்திடுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 தினமும் போடும் டீயை மிக சுவையாய் போடணுமா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement