சுவையான நான்கு வகை மில்க் ஷேக் செய்முறை (Milkshake Recipe in Tamil)..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக்கூடிய சுவையான நான்கு வகை மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!
வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல் |
வாழைப்பழம் மில்க் ஷேக் (Banana milkshake recipe in tamil):-
தேவையான பொருட்கள்:-
- வாழைப்பழம் – 2
- சர்க்கரை – 2 தேக்கரண்டி
- பால் – 1 கப் (250 மில்லி)
- ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
- இலவங்கப்பட்டை தூள் – சிறிதளவு
வாழைப்பழம் மில்க் ஷேக் செய்வது எப்படி:-
இரண்டு வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்க்கவும், பின் இரண்டு ஸ்பூன் சக்கரை, ஒரு கப் காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் நான்கு ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கிளாசில் அரைத்த இந்த கலவையை ஊற்றி அதன் மீது சிறிதளவு இலவங்கப்பொடி தூவி பருகவும்.
மாம்பழம் மில்க் ஷேக் (Mango milkshake recipe in tamil):
மில்க் சேக் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
- மாம்பழம் – 1
- சர்க்கரை – 2 தேக்கரண்டி
- பால் – 1 கப் (250 மில்லி)
- ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
ஜிகர்தண்டா & குல்பி ஐஸ்க்ரீம் எப்படி செய்வது..? |
மாம்பழம் மில்க் ஷேக் செய்முறை?
ஒரு மாம்பழத்தை எடுத்து அவற்றில் உள்ள தோல் மற்றும் கொட்டை பகுதியை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய மாம்பழம், மூன்று ஸ்பூன் சர்க்கரை, ஒரு கப் காய்ச்சிய பால், மூன்று ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மாம்பழம் மில்க் ஷேக் தயார் அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil):
தேவையான பொருட்கள்:-
- சாக்லேட் சிரப் – 4 மேசைக்கரண்டி
- சர்க்கரை – 2 தேக்கரண்டி
- பால் – 1 1/4 கப்
- ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
வீட்டிலேயே பலூடா செய்வது எப்படி ??? |
சாக்லேட் மில்க் ஷேக் செய்வது எப்படி?
மிக்சி ஜாரில் 4 மேசைக்கரண்டி சாக்லேட் சிரப், இரண்டு ஸ்பூன் சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால் 1 1/4 கப், ஐஸ் கட்டிகள் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து. ஒரு முறை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
சுவையான சாக்லேட் மில்க் ஷேக் தயார் இதனுடன் சாக்லேட் சிரப் அல்லது துருவிய சாக்லேட் தூவி பரிமாறவும்.
பாதாம், பிஸ்தா மில்க் ஷேக் செய்வது எப்படி? (Badam milkshake recipe in tamil):
தேவையான பொருட்கள்:-
- பாதாம் – 10
- பிஸ்தா – 10
- சர்க்கரை – 4 தேக்கரண்டி
- பால் – 1 1/4 கப்
- ஐஸ் கட்டிகள் – 3
- குங்குமப்பூ – சிறிதளவு
ஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்யலாம் வாங்க !!! |
பாதாம் பிஸ்தா மில்க் ஷேக் செய்வது எப்படி:-
மிக்சியில் 10 பாதாம், 10 பிஸ்தா, 4 தேக்கரண்டி சர்க்கரை, காய்ச்சிய பால் 1 1/4 கப், சிறிதளவு குங்குமப்பூ மற்றும் ஐஸ் கட்டிகள் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து. மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
சுவையான பாதாம் மில்க் ஷேக் தயார் அனைவருக்கும் அன்போடு பரிமாறவும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |