உங்களுக்காக ஒரு அருமையான மோர் குழம்பு ரெசிபி..!

Advertisement

டேஸ்ட்டான மோர் குழம்பு ரெசிபி | Chettinad Mor Kulambu Recipe in Tamil

ஹாய் பிரண்ட்ஸ், மோர் குழம்பு(mor kulumbu) மிகவும் ருசியான ரெசிபிகளில் ஒன்று. அதை எப்படி சமைத்து அசத்துவது என்பது பற்றி இந்த சமையல் குறிப்பில் பார்ப்போம் வாங்க.

இந்த மோர் குழும்பு(mor kulumbu) உடன் நீர்க் காய்களான (பூசணிக்காய், வெள்ளரிக்காய்) சேர்க்கலாம்.

வெண்டைக்காய் புளிக்குழம்பு வைப்பது போல வெண்டைக்காயிலும் மோர் குழம்பு வைக்கலாம்.

நாம் வெள்ளரிக்காய் மோர் குழம்பு (mor kulumbu) வைப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம் வாங்க ….!

வெள்ளரிக்காய் மோர் குழம்பு (mor kulumbu) செய்ய தேவையான பொருட்கள் :

1) தயிர் – 1 கப் (கெட்டியானது)
2) தேங்காய் – 1/2 கப் (துருவியது)
3) பச்சை மிளகாய் – 3
4) கடலை பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன் (20 நிமிடம் நன்கு ஊற வைத்தது)
5) சீரகம் – 1/2 ஸ்பூன்
6) சின்ன வெங்காயம் – 2
7) இஞ்சி – 1 துண்டு (சிறியது)
8) மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
9) வெள்ளரிக்காய் – தே. அளவு
10) உப்பு – தே. அளவு

இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!

தாளிக்க :-

1) எண்ணெய் – 1ஸ்பூன்
2) உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
3) பெருங்காயம் – பவுடர் கொஞ்சம்
4) கடுகு – 1/2 ஸ்பூன்
5) காய்ந்த மிளகாய் – 3
6)கருவேப்பிலை – தே. அளவு

வெள்ளரிக்காய் மோர் குழம்பு (moor kulumbu) செய்முறை :

chettinad mor kulambu recipe in tamil – முதலில் ஒரு கடாயில் வெட்டி வைத்த வெள்ளரிக்காய்களை தண்ணீரில் நன்கு வேக வைக்க வேண்டும் .

வேக வைக்கும் நேரத்தில் நாம் அரைக்க வைத்துள்ள பொருட்களான தேங்காய் துருவியது , பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி துண்டு, ஊறவைத்த கடலை பருப்பு , சீரகம் ஆகியவற்றை சிறிது நீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

சிம்பிளான செட்டிநாடு இறால் குழம்பு!!! செய்வது எப்படி.?

பிறகு வெள்ளரிக்காய் நன்கு வேகவைத்தவுடன் அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணுங்க
அதனுடன் அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி விடுங்க.

இது கொஞ்சம் ஆறிய பிறகு நாம் அதில் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

இதன் பிறகு இன்னொரு கடாயில் தாளிக்க வைத்துள்ள பொருட்களான காய்ந்த மிளகாய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயப் பவுடர் ,
உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தாளித்துக் கொள்ளவும்.

வேகவைத்த வெள்ளரிக்காய், தேங்காய் கலவையுடன் நன்கு கடைந்த மோர் சேர்க்கவும் . இதனுடன் தாளித்து வைத்துள்ள அனைத்தும் சேர்ந்து நன்கு கலக்கவும். இப்போது வெள்ளரிக்காய் மோர் குழம்பு (mor kulumbu) தயார்.

மோர் குழம்பு (mor kulumbu) சூடாக சாப்பிடுவதற்கு பதிலாக சிறிது ஆறிய பிறகு பரிமாறினால் இன்னும் ரொம்ப சுவையாக இருக்கும்.

நாக்கை தாளம் போட வைக்கும் தயிர் சேமியா – How to Make.?

 

இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement