சளி இருமல் குணமாக தோசை இட்லியில் இதை தொட்டு சாப்பிடுங்கள்..!

Advertisement

முடக்கத்தான் கீரை பொடி

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக சளி இருமல் என்றால் உடனே என்ன செய்வோம் என்றால் இப்போது அனைவருமே  ஹாஸ்பிடல் அழைத்து செல்வோம் அல்லவா. அப்படி இல்லையென்றால் உடனே மாத்திரை மருந்துகளை வாங்கி கொடுப்பார்கள். ஆனால் அந்த காலத்தில் காய்ச்சல் என்றாலும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லமாட்டார்கள் நம் தாத்தா பாட்டிகள்.

ஏனென்றால் அவர்களுக்கு வீட்டிலேயே மருந்துகள் செய்து அதனை இரண்டு மூன்று வேளைகள் எடுத்துக்கொண்டால் எவ்வளவு பெரிய காய்ச்சலாக இருந்தாலும் சரி, சளி இருமலாக இருந்தாலும் சரி மறைந்து விடும். அந்த மருந்து ஒரு உணவாகவும் கூட செய்து கொடுப்பார்கள் அந்த வகையில் இன்று சளி இருமலை குணப்படுத்தும் வகையில் இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

முடக்கத்தான் கீரை பொடி செய்ய தேவையான பொருட்கள்:

  1. காய்ந்த முடக்கத்தான் கீரை 1 கைப்பிடி
  2. உளுத்தம் பருப்பு –  2 டேபிள் ஸ்பூன்
  3. மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  5. காய்ந்த சிவப்பு மிளகாய் – 5
  6. புளி – எலுமிச்சை அளவு
  7. பெருங்காயம் – 1/4 டேபிள் ஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு 

முடக்கத்தான் கீரை பொடி செய்வது எப்படி?

ஸ்டேப்: 1

Mudakathan keerai Podi

 

உங்களுக்கு எண்ணெய் வேண்டுமென்றால் முதலில் நல்லலெண்ணெய்யில் 2 டேபிள் ஸ்பூன் விட்டு மிளகாய், மிளகு இரண்டையும் போட்டு வறுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தையும் போட்டு வறுத்துக்கொள்ளவும், முக்கியமாக சொல்லவேண்டுமென்றால் புளியையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

அனைத்தையும் வறுத்த பிறகு அதனை ஆறவைக்கவும். ஆறியதும் ரொம்பவும் காற்றோட்டமாக அந்த பொருட்களை வெளியில் வைக்க கூடாது சிறிது நேரம் வைத்துவிட்டு அதன் பின் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

அதன் பின் உப்பு சரியாய் இருந்தால் ஓகே இல்லையென்றால் அதில் உப்பு சேர்த்து மீண்டும் அரைத்துக்கொள்ளவும். இதில் மிளகு மிளகாய் காரத்திற்கு தகுந்தது போல் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இட்லி, தோசைக்கு ஈசியாக புதினா கார பொடி இப்படி செய்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement