ஒரே சட்னி செய்யாமல் இந்த சட்னி செய்து பாருங்க..! சுவை சும்மா அள்ளும்’

Advertisement

முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி.?

இன்றைய பதிவில் முட்டைகோஸ் சட்னி எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம். தினமும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, பூண்டு சட்னி என்று மாற்றி செய்வோம். ஆனால் இந்த மாதிரி சட்னியை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சட்னி செய்து கொடுக்கலாம். முட்டைகோஸில் கூட்டு, பொரியல் தான் செய்திருக்கோம் ஆனால் இதில் சட்னி செய்தால் நல்லா இருக்குமா என்று யோசிக்காதீர்கள். ஒரு முறை செய்து பாருங்கள் சுவை அப்படி இருக்கும். நீங்களே மறுபடியும் மறுபடியும் வீட்டில் செய்வீர்கள்.

இதையும் செய்து பாருங்கள்⇒ ஒரு முறை இந்த பீட்ருட் சட்னி ட்ரை செய்து பாருங்கள்..!

முட்டை கோஸ் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – தேவையான அளவு
  • முட்டைக்கோஸ் – ஒரு கப்
  • சீரகம் – 1 தேக்கரண்டி,
  • மிளகு – 1/2 தேக்கரண்டி
  • கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • தனியா விதை – 1/2 தேக்கரண்டி
  • வரமிளகாய் – 4
  • பெரிய வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 1
  • தக்காளி  – 2
  • மல்லித்தழை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • புளி –  நெல்லிக்காய் அளவு
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • உளுந்து – 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
  • வர மிளகாய் – 1
  • கருவேப்பிலை – ஒரு கையளவு

முட்டைகோஸ் சட்னி செய்முறை:1

முதலில் முட்டைகோஸை சிறியதாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

பின் அடுப்பை பத்த வைக்க வேண்டும். அதில் ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

முட்டைகோஸ் சட்னி செய்முறை:2

அதில் நறுக்கிய முட்டைகோஸை சேர்க்கவும். பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

இன்னொரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கொத்தமல்லி  விதை போன்றவை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயிலே இருக்க வேண்டும். அதன் பின் மிளகாயை சேர்க்க வேண்டும்.

முட்டைகோஸ் சட்னி செய்முறை:3

அதன் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறம் வந்ததும் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். தக்காளி சுருங்கிய பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

முட்டைகோஸ் சட்னி செய்முறை:4

அதனுடன் நெல்லிக்காய் அளவு புளி, கொத்தமல்லி தலை சேர்த்து வதக்கவும். வதக்கி வைத்த முட்டைகோஸை சேர்த்து லைட்டா வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும்.

முட்டைகோஸ் சட்னி செய்முறை:5

வதக்கி வைத்த பொருட்களை அரைக்கவும். பின்  தாளிக்க வேண்டும். தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய்  கருவேப்பிலையை , பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பிறகு சட்னியுடன் சேர்க்கவும்.

சுவையான இட்லி, தோசைக்கு வித்தியாசமான வகையில் முட்டைகோஸ் சட்னி தயார்! நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement