இந்த மாதிரி மட்டன் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள்

Advertisement

Mutton Chukka Recipe in Tamil

மட்டனை குழம்பு, கிரேவி, வறுவல் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் மட்டன் சுக்கா வறுவல் சாப்பிட்டது இல்லை என்றால் இந்த பதிவை பார்த்து செய்து பாருங்கள். மட்டனில் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிடுங்கள். சரி வாங்க ருசியாக மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் படித்து தேர்ந்து கொள்வோம்.

மட்டன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:

  1. மட்டன் – 1/2 கிலோ 
  2. சின்ன வெங்காயம் – 10 
  3. மஞ்சள் தூள் –1 தேக்கரண்டி 
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி 
  5. மிளகு – 1 தேக்கரண்டி 
  6. சீரகம் – 1 தேக்கரண்டி 
  7. மல்லி –
  8. காய்ந்த மிளகாய் – 2
  9. உப்பு – தேவையான அளவு 

இதையும் செய்து பாருங்கள் ⇒ வீடே மணக்க கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா செய்ய தெரியுமா..?

மட்டன் சுக்கா செய்முறை:

மட்டன் சுக்கா வறுவல்

ஸ்டேப்:1

முதலில் மிக்சி ஜாரில் 1 தேக்கரண்டி சீரகம், தேக்கரண்டி மிளகு, 2 காய்ந்த மிளகாய், 1 தேக்கரண்டி மல்லி சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்:2

மட்டன் சுக்கா வறுவல்

அடுத்து 1/2 கிலோ மட்டனில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், அரைத்து வைத்த பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் 2 பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்த நிறம் வந்தவுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

ஸ்டேப்:4

மட்டன் சுக்கா வறுவல்

இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து பார்த்தால் எண்ணெய் பிரிந்த நிலையில் வந்திருக்கும். அவ்ளோ தாங்க மட்டன் சுக்கா ரெடி.!

இதையும் செய்து பாருங்கள் ⇒ செட்டிநாடு மட்டன் கிரேவி சுவையாக இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement