மட்டன் ஜாலர் முர்தபா செய்வது எப்படி | Mutton Murtabak Recipe in Tamil
மட்டன் ஜாலர் முர்தபா என்றாலே சில பேருக்கு தெரியாது. இது முஸ்லீம் கொண்டாடும் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் ரொம்பவும் ஸ்பெஷல். அசைவ உணவுகளில் மட்டன் இறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. மட்டன் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை அதிகப்படுத்துகிறது. மட்டனில் அதிகம் இரும்புச்சத்து இருப்பதால் உடலில் நல்ல இரத்தத்தை மேம்படுத்திக்கிறது. எனவே மட்டன் சாப்பிடாதவர்களுக்கு இந்த ஜாலர் முர்தபா செய்துதரலாம். அசைவ பிரியர்கள் இதை சாப்பிட்டால் விடவே மாட்டார்கள். மட்டன் ஜாலர் முர்தபா மிகவும் எளிதாக வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..
முற்றிலும் வித்தியாசமான சிக்கன் ரெசிபி |
ஜாலர் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- வாட்டர் பாட்டில்
- மைதாமாவு – 2 கப்
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் துருவல்
- முட்டை – 2
- சின்ன வெங்காயம் – 1
- பச்சைமிளகாய் – 2
- சோம்பு – சிறிதளவு
மட்டன் முர்தபா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- மட்டன்
- பெரியவெங்காயம் – 1
- தக்காளி – 1
- பச்சைமிளகாய் – 2
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்புன்
- மஞ்சத்தூள் – 1/2 டீஸ்புன்
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்புன்
- மிளகுத்தூள் – 1/2 டீஸ்புன்
- தண்ணீர் – தேவையான அளவு
ஜாலர் செய்யும் முறை:
ஜாலரில் மட்டன் மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்கு பதில் சிக்கன் கிரேவி, முட்டை கிரேவி, தக்காளி வறுவல் கூட சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமில்லாமல் சட்னி கூட சேர்த்து சாப்பிடலாம்.
ஸ்டேப் – 1
முதலில் ஒரு பவுலை எடுத்து கொண்டு 2 கப் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, முட்டை சேர்த்து கலந்து விடவும். மைதாவை கட்டி இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
தேங்காய் துருவல், நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய், சோம்பு ஆகியவற்றை எடுத்து வைக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
கலந்து வைத்த மைதாமாவில் அரைத்து எடுத்த தேங்காய் சாறை ஊற்றி கட்டி இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். மாவு ரொம்பவும் தண்ணியாக இல்லாமலும் கெட்டியாக இல்லாமலும் இருக்க வேண்டும்.
ஸ்டேப் – 4
பின் நான்ஸ்டிக் பேன் (அல்லது) தோசைக்கல் வைத்து அதில் எண்ணெய் தேய்த்து கொள்ளவும். பின்பு ஒரு வாட்டர் பாட்டில் மூடியில் மூன்று ஓட்டை போட்டு கொள்ளவும். அதன் பிறகு கலந்து வைத்த மாவை பாட்டிலில் சேர்த்து கொள்ளவும்.
ஸ்டேப் – 5
பேன் சூடான பிறகு பாட்டிலை எடுத்து முறுக்கு பிழிவது போல் நமக்கு பிடித்த மாறி எந்த வடிவத்தில் வேண்டுமோ செய்து கொள்ளலாம். ஜாலர் மொறு மொறுவென்று வந்த உடன் எடுத்து கொள்ளவும்.
மட்டன் முர்தபா செய்யும் முறை:
ஸ்டேப் – 6
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போன்றவை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பின் சுத்தம் செய்த மட்டனை பொடி பொடியாக நறுக்கி , கோலா உருண்டைக்கு அரைப்பது போல அரைத்து கொள்ளவும்.
மட்டன் முர்தபா செய்வதற்கு ஒரு கடாயில் 3 டீஸ்புன் எண்ணெய் ஊற்றவும். அதில் நறுக்கி வைத்த வெங்காயம் பொன்னிறம் வரும் வரை வதக்கி கொள்ளவும். பின்பு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மசியும் வரை வதக்கி கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்புன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப் – 7
அதனுடன் அரைத்து வைத்த மட்டனை சேர்க்கவும். பிறகு மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
ஸ்டேப் – 8
மட்டன் முர்தபா மசாலா கெட்டியான பதம் வந்த பிறகு செய்து வைத்திருந்த ஜாலரை நான்ஸ்டிக் பேனில் வைத்து மட்டன் முர்தபா மசாலாவை ஜாலர் மேல் சேர்த்து ஜாலரை நான்கு லேயர்களையும் மடித்து, அதனை ஒரு பக்கம் வெந்தவுடன் மற்றொரு பக்கத்தையும் பிரட்டி எடுத்து கொள்ளவும். இவ்வாறு மற்ற மாவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது சுவையான மட்டன் ஜாலர் முர்தபா தயார். சுவைக்கலாம் வாங்க..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |