தீபாவளிக்கு இந்த மாதிரி நெய் மைசூர் பாக் செஞ்சு சாப்பிட்டு பாருங்க..!

Advertisement

Nei Mysore Pak Recipe in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..!  இன்றைய சமையல் குறிப்பு பதிவில் ருசியான மணக்கும் நெய் மைசூர் பாக் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள போகிறோம். மைசூர் பாக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மைசூர் பாக் நீங்கள் ஆரோக்கியமான முறையில் வீட்டிலே செய்யலாம். வாங்க நண்பர்களே 10 நிமிடத்தில் மிகவும் சுவையான நெய் மைசூர் பாக் ஆரோக்கியமான முறையில் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

இந்த தீபாவளிக்கு இது மாதிரி ஸ்வீட் செஞ்சி சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்..!

நெய் மைசூர் பாக் செய்வது எப்படி..? 

நெய் மைசூர் பாக் – தேவையான பொருட்கள்:

  1. கடலை மாவு – 1 கப்
  2. நெய் – 1 1/2 கப்
  3. சர்க்கரை – 1 கப்
  4. தண்ணீர் – கால் கப்

மணக்கும் நெய் மைசூர் பாக் செய்முறை:

Nei Mysore Pak

செய்முறை – 1

முதலில் ஒரு கடாயில் 1 கப் கடலை மாவு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடலை மாவு நன்றாக வறுபடும் வாசம் வரும் வரை கிண்ட வேண்டும்.

பின் வறுத்த கடலை மாவை நன்றாக சலித்து எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மாவு Soft ஆக இருக்கும்.

செய்முறை – 2

பின் அதே கடாயில் 1 1/2 கப் நெய் சேர்த்து உருக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை – 3

பின் கடலை மாவுடன் தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்.

செய்முறை – 4 

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 கப் அளவு சர்க்கரையை போட வேண்டும். அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.

செய்முறை – 5

சர்க்கரை பாவு நன்றாக கொதித்த பின் அதில் நாம் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து இடை விடாமல் கிண்ட வேண்டும்.

நாம் பயன்படுத்தியதில் மீதமுள்ள எல்லா நெய்யையும் இதில் சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்.

கடலை மாவும் சர்க்கரை பாவும் நன்றாக வெந்து வந்தவுடன் அடுப்பில் இருந்து இரக்க வேண்டும்.

செய்முறை – 6

பிறகு ஒரு கிண்ணம் முழுவதும் நெய் தடவி அதில் இந்த கலவையை சேர்த்து 5 நிமிடங்கள் ஆறவிட வேண்டும்.

5 நிமிடங்கள் கழித்து நமக்கு தேவையான அளவில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே 10 நிமிடத்தில் மணக்கும் நெய் மைசூர் பாக் ரெடி..! இந்த மாதிரி மணக்கும் நெய் மைசூர் பாக் நீங்களும் தீபாவளிக்கு உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும்..!

புதிய சுவையில் தீபாவளி ஸ்பெஷல் லட்டு இப்படி செஞ்சி பாருங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement