பால் கொழுக்கட்டை செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே இன்றைய சமையல் பதிவில் ஒரு அருமையான பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வது பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக நாம் தேங்காய் பால் கொழுக்கட்டை, வெல்லம் கொழுக்கட்டை, அரிசிமாவு கொழுக்கட்டை என்று சாப்பிட்டு சலித்து போயிருப்போம். எனவே இன்றைக்கு நாம் செய்ய போகின்ற கொழுக்கட்டை என்னவென்றால், “அவல் பால் கொழுக்கட்டை”, இதனை நீங்கள் ஒரு முறை சாப்பிட்டால் விடவேமாட்டீர்கள், மிகவும் எளிதாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு எப்படி செய்வது என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
பால் கொழுக்கட்டை செய்யும் முறை..! |
அவல் பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
- அவல் மாவு- 1 கப்
- வெல்லம்- தேவையான அளவு
- ஏலக்காய்த்தூள்- சிறிதளவு
- பால் – 500 மி.லி
- நெய்- 1 ஸ்பூன்
- பாதம் பவுடர்- 1 டேபிள் ஸ்பூன்
அவல் பால் கொழுக்கட்டை செய்யும் முறை:
ஸ்டேப்:1
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதில் அவல் மாவை அந்த பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப்:2
அவல் மாவை சேர்த்த பிறகு அதில் சிறிதளவு உப்பு, நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும், அதன் பிறகு வெந்நீரை அதில் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்:3
பிசைந்த பிறகு , அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு மிதமான சூட்டில் அடுப்பில் வைக்க வேண்டும்.
ஸ்டேப்:4
பாத்திரம் சூடானதும் அதில் பால் மற்றும் பாதாம் பவுடரை கலந்து அந்த பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பால் கொஞ்சம் கொதி வந்ததும் அதில் ஏலக்காய் பவுடர், வெல்லம் சேர்த்து, ஒரு கரண்டியை வைத்து கிளறிவிட வேண்டும். அதன் பிறகு உருட்டி வைத்த உருண்டைகளை பொறுமையாக அதில் சேர்க்க வேண்டும். உருண்டைகளை சேர்த்த பிறகு 5 நிமிடம் கழித்து, அடுப்பு தீயை அணைத்து விடுங்கள்.
இந்த ஆரோக்கியமான அவல் பால் கொழுக்கட்டையை நீங்களும் உங்களுடைய குழந்தைகளுக்கு செய்துகொடுங்கள்.
பூரணம் கொழுக்கட்டையை இப்படி செய்து பாருங்கள் |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!! |