முறையான கல்யாண வீட்டு பால் பாயாசம் | Paal Payasam in Tamil

Paal Payasam in Tamil

பால் பாயாசம் செய்வது எப்படி? | Paal Payasam Recipe in Tamil

பாயாசம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பாயாசத்தில் சேமியா பாயாசம், பருப்பு பாயாசம், அவல் பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், அரிசி பாயாசம், தினை பாயாசம், பால் பாயாசம் போன்ற பல வகைகளில் பாயாசங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் தனித்தனி ருசியை கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நாம் இந்த தொகுப்பில் பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பால் பாயாசம் செய்வது எப்படி

  1. பால் – அரை லிட்டர்
  2. பச்சரிசி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  3. சர்க்கரை – தேவையான அளவு
  4. முந்திரி – 10
  5. காய்ந்த திராட்சை – 5
  6. ஏலக்காய் தூள்  – 3 டேபிள் ஸ்பூன்
  7. நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப்: 1

Paal Payasam Seivathu Eppadi: முதலில் ஒரு பௌலில் பச்சரிசியை ஒன்றரை டேபிள் ஸ்பூன் எடுத்து 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

வித்தியாசமான கற்றாழை பருப்பு பாயசம் செய்யும் முறை

 

ஸ்டேப்: 2

Paal Payasam Recipe in Tamil: பின் ஒரு கடாயில் அரை லிட்டர் பால் ஊற்றி கொள்ளவும். பின் அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். (அரை  லிட்டர் பாலுக்கு முக்கால் லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்).

ஸ்டேப்: 3

Paal Payasam in Tamil: பால் கொதிக்கும் போது அதை நன்றாக கிண்டி விடவும். பின் ஊறவைத்த பச்சரிசியை பாலில் சேர்த்து கிண்டி விடவும்.

ஸ்டேப்: 4

பால் பாயாசம் செய்வது எப்படி? அரிசி வெந்து பால் கட்டியானவுடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து கிளறவும்.

ஸ்டேப்: 5

Paal Payasam Recipe in Tamil: பின் ஒரு கடாயில் நெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடான பிறகு முந்திரி 10, காய்ந்த திராட்சை 5 சேர்த்து வறுக்கவும். வறுத்தவுடன் இதை பால் பாயாசத்தில் சேர்க்கவும். இப்போது சுவையான பால் பாயாசம் தயார்.

உடைத்த கோதுமை பாயாசம் செய்முறை

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!