அய்யர் வீட்டு பருப்பு பொடி செய்முறை விளக்கம்..!

Advertisement

அய்யர் வீட்டு பருப்பு பொடி செய்முறை விளக்கம் | ஐயர் வீட்டு பருப்பு பொடி

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஐயர் வீட்டு பருப்பு பொடி செய்வது எப்படி.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஐயர் வீட்டு பருப்பு போடி மிகவும் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். குழம்பு வைக்க முடியாத சமயத்தில் கைகொடுக்கும் பருப்பு பொடியினை நாம் அனைவரும் பொதுவாக கடைகளில் தான் அதிகமாக காசு கொடுத்து வாங்குவோம்.

இந்த பருப்பு பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே அந்த பருப்பு பொடியை நம் வீட்டில் மிக எளிமையாக தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் செய்முறை விளக்கத்தை படித்தறிவோம் வாங்க.

பருப்பு பொடி செய்வது எப்படி.? | Paruppu Podi Seivathu Eppadi:

Paruppu Podi Seivathu Eppadi

பருப்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்:

 1. துவரம் பருப்பு – 1/2 கப்
 2. பொட்டுக்கடலை – 1/2 கப்
 3. கடலை பருப்பு – 1/4 கப்
 4. பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
 5. உப்பு – தேவையான அளவு
 6. பூண்டு – 4 பற்கள்
 7. மிளகு – 1/4 ஸ்பூன்
 8. காய்ந்த மிளகாய் – 5
 9. சீரகம் – 1/4 ஸ்பூன்
 10. கருவேப்பிலை – சிறிதளவு

பருப்பு பொடி செய்முறை:

பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu Podi Recipe Step: 1

 • முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றை சூடேற்றவும், பின் 1/2 கப் துவரம் பருப்பை சேர்த்து வாசனை வரும் அளவிற்கு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பிளேட்டில் எடுத்து கொள்ளுங்கள்.

பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu Podi Recipe Step: 2

 • பின் 1/4 கப் கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu Podi Recipe Step: 3

 • பிறகு அதே கடாயில் 5 காய்ந்த மிளகாய், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கருவேப்பிலை, பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்.
சாட் மசாலா பொடி செய்வது எப்படி?

பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu Podi Recipe Step: 4

 • இறுதியாக பொட்டுக்கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
 • அவ்வளவுதான் வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, நன்றாக ஆறவைத்து கொள்ளவும்.

பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu Podi Recipe Step: 5

 • பின் மிக்சியில் நன்கு மைபோல் அரைத்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பருப்பு பொடி தயார்.
 • இந்த பருப்பு பொடியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement