கார்த்திகை தீபம் ஸ்பெஷல் வேர்க்கடலை லட்டு செய்முறை | Peanut Laddu Recipe in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் நாளைக்கி.. கார்த்திகை தீபம் உங்கள் வீட்டுல என்ன ஸ்வீட் செய்யப்போறீங்க. இன்னும் அதற்கு எந்த ஒரு ஐடியாவும் இல்லை என்றால் நாளைக்கி கண்டிப்பாக வேர்க்கடையில் இந்த ஸ்வீட் ரெசிபியை ட்ரை பண்ணுங்கள். டெஸ்ட் சும்மா அள்ளும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் உடலுக்கும் ஆரோக்கியமாகும். சரி வாங்க வேர்க்கடையில் சுவையான லட்டு தயார் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வேர்க்கடை – ஒரு கிலோ
- வெல்லம் – 400 கிராம்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- நெய் – 3 ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தேங்காய் இருந்தால் போதும் மிகவும் ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம்..!
வேர்க்கடலை லட்டு செய்முறை விளக்கம் – Verkadalai Laddu Recipes:
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வேர்க்கடலை வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த கடலையாக இருந்தால் அதனை மீண்டும் வறுக்க வேண்டாம். கடையில் வாங்கும் போது உப்பு சேர்க்காமல் 1 கிலோ வறுத்த வேர்க்கடையை வாங்கிக்கொள்ளுங்கள். வருக்காத வேர்க்கடையாக இருந்தால் வறுக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
பிறகு அதில் உள்ள தோலை அகற்றிவிடுங்கள். ஒன்று இரண்டு வேர்க்கடை தோலுடன் இருந்தால் பரவாயில்லை. ஓரளவு அவற்றில் உள்ள தோலை நீக்கிவிடுங்கள்.
ஸ்டேப்: 3
பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் பட்டனை பயன்படுத்தி ஒரு 3 முறை அரைத்துக்கொள்ளுங்கள். நிறைய வேர்க்கடை இருந்தால் இரண்டு பேஜாக பிரித்து அரைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
அரைத்த வேர்கடலையை ஒரு அகலமான பவுலில் கொட்டில் அதனுடன் துருவிய வெல்லத்தை சேர்த்து ஒருமுறை பிசைந்துகொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
இவ்வாறு பிசைந்த பிறகு மீண்டும் மிக்ஸி ஜாரில் செய்து பல்ஸ் பட்டனை பயன்படுத்தி இரண்டு முறை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 6
பிறகு அரைத்த கலவையை ஒரு பவுளிற்கு பற்றிக்கொள்ளுங்கள். இப்பொழுது கொஞ்சம் கலவையானது கட்டியாக இருக்கும் அந்த கட்டிகளை நன்றாக உதிர்த்து விட்டுக்கொள்ளவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 கப் ரவை இருந்தால் போதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ருசியான ஸ்வீட் ரெடி..!
ஸ்டேப்: 7
இப்பொழுது இந்த கலவையுடன் ஏலக்காய் தூள் சிறிதளவு மற்றும மூன்று ஸ்பூன் நெய் செய்து நன்றாக பிசையவும்.
ஸ்டேப்: 8
இவ்வாறு பிசைந்த உங்களுக்கு ஏற்ற அளவில் உருண்டை பிடித்துக்கொள்ளுங்கள். அவ்வளவு தான் வேர்க்கடை லட்டு தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |