பசியை தூண்டும் இந்த பிரண்டை துவையல்..!

pirandai uses in tamil

பசி எடுக்க பாட்டி வைத்தியம்..! பிரண்டை  துவையல்..!

pirandai uses in tamil:- பிரண்டை இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பசுமைகாடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. பிரண்டை ஜீரண சக்தியை அதிகப்படுத்தி பசியைத்தூண்டக்கூடிய தன்மைகொண்டது. பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது. இத்தகைய பிரண்டையை குழம்பாக, வற்றலாக, பிரண்டை உப்பு என்று பலவைகள் செய்யலாம்.  அந்த வகையில் இந்த பதிவில் பசியை தூண்டக்கூடிய பிரண்டை துவையல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்..!

குதிரைவாலி தோசை செய்முறை விளக்கம்..!

பிரண்டை  துவையல் செய்முறை..!

பிரண்டை துவையல்

தேவையான பொருட்கள்:-

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

  1. பிரண்டை – 1 கட்டு
  2. உளுத்தம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  3. பூண்டு – 10 பல்
  4. இஞ்சி – 1 துண்டு
  5. காய்ந்த மிளகாய் – 5 முதல் 6
  6. தேங்காய் – 1 துண்டு
  7. புளி – சிறிதளவு
  8. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  9. உப்பு – தேவையான அளவு
  10. பெருங்காயத்தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
பிரண்டை பயன்கள்

பிரண்டை  துவையல் செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின்னர் அடுப்பில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பினை சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

உளுத்தம்பருப்பு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பின் பூண்டு, இஞ்சி இரண்டையும் சேர்க்கவும். சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு 1/4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும். தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்க்கவும். பிரண்டை வதங்கும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.

ஸ்டேப்: 4

இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின் ஆற வைக்கவும். சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

சுவையான சத்தான பிரண்டை துவையல் ரெடி. இந்த துவையலை 2 முதல் 3 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

பிரண்டை பயன்கள்..!

பிரண்டை பயன்கள்

pirandai uses in tamil: 1

பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.

pirandai uses in tamil: 2

பிரண்டை சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

pirandai uses in tamil: 3

பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட, ரத்த மூலம் குணமாகும்.

pirandai uses in tamil: 4

பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.

pirandai uses in tamil: 5

உள் மற்றும் வெளி மூலம் மற்றும் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.

 

இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>சமையல் குறிப்புகள்