5 நிமிடத்தில் செய்ய கூடிய ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி..!

Advertisement

பூரி மசாலா செய்முறை | Poori Masala Recipe in Tamil

பலருக்கு மிகவும் பிடித்த உணவு லிஸ்டில் பூரியும் ஒன்று. இந்த பூரிக்கு செய்யும் பூரி மசாலாவும் வேற லெவலில் இருக்கும். இதன் காரணமாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் பூரியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சிலருக்கு பூரி மசாலா செய்வது எப்படி என்று தெரிவதில்லை. அவர்களுக்கானது தான் இன்றைய பதிவு அதாவது இன்று நாம் ஹோட்டல் சுவையில் பூரி மசாலா செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். சரி வாங்க பூரி மசாலா செய்ய தேவைப்படும் பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி முதலில் பார்ப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
  2. எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  3. கடலை பருப்பு – இரண்டு ஸ்பூன்
  4. கடுகு – ஒரு ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் – ஐந்து
  7. பெரிய வெந்தயம் – இரண்டு
  8. உப்பு – தேவையான அளவு
  9. கருவேப்பிலை – 1/2 ஸ்பூன்
  10. தக்காளி – ஒன்று
  11. தண்ணீர் – இரண்டு டம்ளர்
  12. கடலை மாவு – இரண்டு ஸ்பூன்
  13. கொத்தமல்லி இலை – சிறிதளவு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஈஸியான முறையில் தேங்காய் போலி இப்படி செஞ்சி பாருங்க..! சூப்பரா இருக்கும்..!

பூரி மசாலா செய்முறை – Poori Masala Recipe in Tamil:Poori Masala

வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக கட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக்கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கை குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவைத்து, தோலை உரித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

கொத்தமல்லி இலையை சிறிதளவு பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை சமைப்பதற்கு தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு மற்றும் கடுகு ஆகியவற்றை சேர்க்கவும்.

கடுகு பொரிந்து வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்து பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

5 நிமிடம் கழித்து அதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை மசித்து மசாலாவுடன் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மசாலாவை 10 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

10 நிமிடம் கழித்து ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கடலைப் பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள் அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து மசாலாவில் சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கொதிக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்த பொடிதாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை மசாலாவில் தூவி ஒரு முறை கிளறிவிட்டு இறக்கினால் ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா தயார்.

கண்டிப்பாக இங்கு கூறப்பட்டுள்ளது போல் உங்கள் வீட்டில் பூரி மசாலா செய்து அசத்துங்கள் நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மிளகு பொங்கல், வெண்பொங்கல் செய்யாமல் இந்த மாதிரி பொங்கல் செய்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement