வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நாகூர் ஸ்பெஷல் இறால் வாடா செய்வது எப்படி? | Prawn Vadai Recipe in Tamil

Updated On: September 13, 2023 12:01 PM
Follow Us:
Prawn Vadai Recipe in Tamil
---Advertisement---
Advertisement

இறால் வாடா செய்வது எப்படி? | Eral Vadai Seivathu Eppadi

தமிழ்நாட்டில் கிடைக்கும் உளுந்து வடையின் இன்னொரு பிறவி தான் இறால் வாடா. மஞ்சள் வாடா, தொப்பிவாடா, சூலிவாடா என மூன்று வாடாக்கள் மற்றும் ஒரு சீனி வாடா எனும் இனிப்பு வாடாவும் உள்ளது. உளுந்து வடையை விட இதில் இருக்கும் கூடுதலான மொறுமொறுப்பும், வித்தியாசமான சுவையும் வேற லெவல் என்றே சொல்லலாம். உங்களுக்கு இந்த வாடா செய்ய தெரியவில்லையா? கவலையே வேண்டாம் கீழே இறால் வாடா எப்படி செய்ய வேண்டும் என்ற முழு ரெசிபியும் கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி – 1 கப்
  2. சாதம் – 1 கப் (வேகவைத்தது)
  3. ரவை – 4 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு – தேவையான அளவு
  5. எண்ணெய் – கால் லிட்டர்
  6. வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
  7. பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
  8. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
  9. மிளகாய் தூள் – சிறிதளவு
  10. இறால் அல்லது இறால் கருவாடு – தேவையான அளவு

செய்முறை:

இறால் வாடா செய்வது எப்படி

ஸ்டேப்: 1

முதலில் 1 கப் பச்சரிசி எடுத்து அதனை நான்கு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பின் ஒரு கப் வேகவைத்த சாதம் எடுத்து கொள்ளவும் (ஊறவைக்கும் அரிசி மற்றும் வேகவைத்த சாதம் சம அளவு எடுத்து கொள்ளவும்).

ஸ்டேப்: 2

பச்சரிசி ஊறிய பின் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளவும். பின் அதே போல சாதத்தையும் அரைத்து கொள்ளவும். பின் அரைத்து வைத்த சாதம் மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து மிக்ஸ் செய்து 4 – 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

ஸ்டேப்: 3

மாவு புளித்த பிறகு 4 டேபிள் ஸ்பூன் ரவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 4

பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் 1, மஞ்சள் தூள் அரை டேபிள் ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

வதக்கிய பின்னர் அதன் மேல் கொத்தமல்லி இலையை தூவி வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்து கொள்ளவும். இதற்கு பெயர் உள்ளடம்.

ஸ்டேப்: 5

அதன் பிறகு ஒரு Pan-ல் தேவையான அளவு இறால், அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும் (இறால் கருவாடு இருந்தால் இந்த ஸ்டேப் செய்ய தேவையில்லை இறால் கருவாடையே பயன்படுத்தி கொள்ளலாம்)

ஸ்டேப்: 6

ஒரு பாலிதீன் கவர் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் தடவி அரைத்து வைத்திருக்கும் மாவை வடை போல தட்டி கொள்ளவும். பின் அதன் மேல் வதக்கி வைத்திருக்கும் இறாலை வைக்கவும் (இதே போல மீதம் இருக்கும் மாவையும் தட்டி கொள்ளுங்கள்).

ஸ்டேப்: 7

பின் ஒரு கடாயில் கால் லிட்டர் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு தட்டி வைத்திருக்கும் இறால் வாடாவை அதில் சேர்த்து கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை பொரித்து எடுக்கவும்.

அவ்வளவு தான் சுவையான நாகூர் ஸ்பெஷல் இறால் வாடா தயார். இந்த இறால் வாடாவுடன் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now