புளிச்ச கீரை தொக்கு, துவையல், சட்னி செய்வது எப்படி? Pulicha Keerai Recipe..!

Advertisement

புளிச்ச கீரை நன்மைகள்..! Pulicha Keerai Benefits in Tamil..!

Pulicha Keerai Recipe: அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! புளிச்ச கீரை தோலில் ஏற்படும் அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. புளிச்ச கீரையினை நன்றாக மை போன்று அரைத்து சொறி, சிரங்கு போன்ற காயங்களில் தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இந்த புளிச்ச கீரையினை சாப்பிட்டு வருவதனால் முடி உதிர்வு பிரச்சனையை முற்றிலும் தவிர்க்கலாம். அந்த வகையில் புளிச்ச கீரையை (pulicha keerai benefits) வைத்து என்னென்ன உணவு வகைகளை சமைத்து உண்ணலாம் என்பதை பற்றி இந்தப் பதிவில் விரிவாக படித்தறியலாம்..!

newஇதையும் படிங்கள்>> பொன்னாங்கண்ணி கீரை கூட்டு,பொரியல், சூப் செய்வது எப்படி? 

புளிச்ச கீரை ரெசிபி – Pulicha Keerai Recipe:

Pulicha Keerai Thuvaiyal Recipe in Tamil/ புளிச்ச கீரை துவையல் செய்வது எப்படி:

Pulicha Keerai Thuvaiyal Recipe in Tamil

தேவையான பொருள்: புளிச்ச கீரை – 1 கட்டு, காய்ந்த மிளகாய் – 10, முழு தனியா – 1 1/2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பூண்டு – 8, வெங்காயம் – 1, வெந்தயம் – 1/2 டீஸ்பூன், உப்பு/ எண்ணெய் – தேவையான அளவு, பூண்டு – 6 பல்.  

புளிச்ச கீரை துவையல் செய்வது எப்படி – செய்முறை:

  • புளிச்ச கீரை துவையல் செய்வதற்கு முதலில் கடாயில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கீரையினை தவிர்த்து மற்ற பொருள்கள் அனைத்தையும் கடாயில் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
  • நன்றாக வதக்கிய பிறகு தனியாக எடுத்து ஆறவைக்கவும்.
  • அடுத்து அதே கடாயில் அலசி வைத்துள்ள கீரையினை அதில் போட்டு வதக்கவும். வதக்கிய பிறகு நன்றாக ஆறவைக்கவும்.
  • இப்போது முதலில் வதக்கி வைத்து ஆறவைத்துள்ள மிளகாய் மற்றும் மற்ற பொருள்களை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • அதனுடன் ஆறவைத்து வதக்கிய கீரையினை தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • இப்போது அரைத்ததை கடாயில் சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளவும். அரைத்த விழுதானது நன்றாக வதங்கி சேர்த்த எண்ணெயானது மேலே மிதக்கும் வரை வதக்கவும். சுவையான புளிச்ச கீரை துவையல் தயார்.

Pulicha Keerai Kadaiyal Recipe/ புளிச்ச கீரை கடையல் செய்வது எப்படி: 

Pulicha Keerai Kadaiyal Recipeதேவையான பொருள்: புளிச்ச கீரை 1 கட்டு, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 4, உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு. 

தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் – 1/4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4.

புளிச்ச கீரை செய்வது எப்படி – செய்முறை:

  • புளிச்ச கீரையில் கடையல் செய்வதற்கு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்ததாக புளிச்ச கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொதிக்கின்ற நீரில் வேகவைத்து அதனுடைய நீரினை வடித்து கடைந்து வைத்துக்கொள்ளவும்.
  • கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்றாக சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், மிளகாய்வற்றல் போட்டு தாளித்த பிறகு பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • கடாயில் வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு கடைந்து வைத்துள்ள கீரை, உப்பு தேவையான அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து அதன் பிறகு இறக்கவும்.
  • இந்த புளிச்ச கீரையின் கடையலை சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Pulicha Keerai Thokku/ புளிச்சக்கீரை தொக்கு செய்வது எப்படி:

Pulicha Keerai Thokku

தேவையான பொருள்: புளிச்சக்கீரை 1 கட்டு, கடுகு, புளி, உப்பு மற்றும் நல்லெண்ணெய் தேவையான அளவு, பூண்டு பல் – 15. 

அரைக்க: தனியா 2 ஸ்பூன், சீரகம் 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, வெந்தயம் – 1 ஸ்பூன். (இவற்றையெல்லாம் கடாயில் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு நன்றாக வதக்கிய பின் மிக்ஸியில் அரைக்கவும்).

Pulicha Keerai Seivathu Eppadi – செய்முறை:

  • இப்போது கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள கீரையுடன் பூண்டு பல்லினை சேர்த்து வதக்கி விடவும்.
  • அதனுடன் புளி, உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்துவைத்துள்ள மசாலாவினை சேர்த்து கிளறிவிடவும். இப்போது புளிச்ச கீரை தொக்கு ரெடி.

Pulicha Keerai Chutney/ புளிச்ச கீரை சட்னி வைப்பது எப்படி:

Pulicha Keerai Chutney

தேவையான பொருள்: புளிச்ச கீரை 1 கட்டு, புளி சிறிதளவு, பூண்டு பல் – 15, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, வெந்தயம் – 1/4 டீஸ்பூன், தனியா (விதை) -1 டேபிள்ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 1 கப், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை:

  • புளிச்ச கீரை (pulicha keerai) சட்னி செய்வதற்கு கீரையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு புளியை நன்றாக கழுவி வெந்நீரில் ஊறவைக்கவும். அடுத்து கடாயில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
  • அடுத்ததாக வெந்தயம் மற்றும் தனியாவை கொரகொரப்பாக பொடி செய்து வைக்கவும். அடுத்து ஊறிய புளி (அதன் நீர்), அதனுடன் 10 பூண்டு பல்லை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • கடாயில் அரை கப் எண்ணெய் விட்டு கீரையினை நன்றாக நீர் போகும் வரை வதக்கிக்கொள்ளவும். அதன் பிறகு மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், மீதமுள்ள பூண்டு (பொடியாக நறுக்கியது) பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள கீரையில் கொட்டவும்.
  • எண்ணெயானது சூடான நிலையில் இருக்கும் போதே இதனுடன் அரைத்து வைத்துள்ள பொடி, மிளகாய் தூள், உப்பு மற்றும் புளி கலவையினை சேர்க்கவும். இப்போது எல்லாவற்றையும் நன்றாக கிளற வேண்டும். சூப்பரான புளிச்ச கீரை சட்னி தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement