குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை செய்து கொடுத்து ஏமாத்தலாம் ..! அவர்களுக்கே தெரியாது இது என்ன டிஷ் என்று..!

pulicha maavu recipe in tamil

புளித்த மாவு ரெசிபி

நண்பர்களே வணக்கம் இன்றைய பதில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம்..! பொதுவாக புளித்த மாவு என்றால் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்காது. அதனை தூக்கி எறிவார்கள். ஆனால் அம்மாவிற்கு மட்டும் அது மனது கஷ்டமாக இருக்கும். மிகவும் புளித்த மாவை வைத்து சுலபமான சூப்பரான மாலை நேர ஸ்னாக்ஸ் சாப்பிடப்போகிறோம்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இதை செய்துகொடுத்து அவர்களை எமர்த்தலாம் அவர்களுக்கு செய்து கொடுத்த பிறகு அவர்களிடம் சொன்னால் மட்டுமே அது புளித்த மாவு என்று தெரியும் அந்த அளவிற்கு அதனுடைய சுவை மிகவும் தனி..!

தேவையான பொருட்கள்:

 1. புளித்த மாவு 3 பேர் சாப்பிடும் அளவு
 2. ரவை 2 டேபிள் ஸ்பூன்
 3. உருளைக்கிழங்கு 2 (வேகவைத்தது)
 4. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
 5. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
 6. பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
 7. வெங்காயம் – 2 கைப்பிடி அளவு
 8. பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
 9. கருவேப்பிலை கொத்தமல்லி – 1 கொத்து
 10. சீரகம் – 1/4 ஸ்பூன்
 11. மிளகு – 1/4  ஸ்பூன்

Pulicha Maavu Paniyaram:

ஸ்டேப் – 1

முதலில் ஒரு கிண்ணத்தில் 3 அல்லது 4 பேர் சாப்பிடும் அளவிற்கு புளித்த மாவு எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 2

பின் அந்த மாவில் ரவை 2 டேபிள் ஸ்பூன், நாம் முன்பே 2 உருளை கிழங்கை வேகவைத்து எடுத்து வைத்திருப்போம். அதனை நன்றாக மசித்து அதில் சேர்க்கவும்.

ஸ்டேப் – 3

அதன் அந்தமாவுடன் மிளகாய் தூள் 1/2  டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

ஸ்டேப் – 4

கலந்த பின் அந்த மாவுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தையம், பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது, சீரகம் 1/4, மிளகு 1/4 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். கடைசியாக உப்பு சேர்த்து நன்கு கலந்த பின் தோசை கல்லிலோ அல்லது குழிப்பணியார கல்லிலோ ஊற்றி கொள்ளவும் தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

ஒரே மாவில் 5 வையான தோசை ரெசிபி செய்முறை..!

 

இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>சுவைசுவையான சமையல் குறிப்புகள்