ராஜமுந்திரி விக்கன் பிரியாணி..! பெயரே வித்தியாசமாக இருக்கா..? அதுபோல் தான் பிரியாணியும் செம டேஸ்ட்..!

Advertisement

ராஜமந்திரி விக்கன் பிரியாணி  | Rajahmundry Biryani Recipe in Tamil 

பொதுவாக பிரியாணி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அதேபோல் சிலருக்கு சில வகையான பிரியாணி மிகவும் பிடிக்கும். பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான வகையான பிரியாணி சாப்பிடுவார்கள். ஆம் இன்று வித்தியாசமான முறையில் ராஜமுந்திரி விக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl

Raja Manthiri Biryani in Tamil:

செய்முறை: 1

முதலில் கடாயை அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து, பிரியாணிக்கு தேவையான பொருட்களை சேர்த்துவிட்டு பின் 3 பச்சை மிளகாய், கொஞ்சமாக கஸ்தூரிமேத்தி மற்றும் நைசாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி கலந்துவிடவும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். 1.1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்கவிடவும்.

செய்முறை: 2

கொதிக்கும் போது 1 கப் பாசுமதி அரிசி ஊறவைத்து எடுத்து வைத்திருப்போம். அதனை அதில் சேர்த்து வேக வைத்து எடுத்துகொள்ளவும்.

செய்முறை: 3

அடுத்து ஒரு கடாயில் Vicken Chunks வாங்கி அதில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பல விதமான பிரியாணி செஞ்சிருப்பீங்க..! ஆனா வீடே மணக்கும் அளவிற்கு கொண்டைக்கடலை பிரியாணி செய்திருக்கீங்களா..?

செய்முறை: 4

அடுத்து ஒரு கடாயை வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து 2 பச்சை மிளகாய், 1 வெங்காயம் நறுக்கி சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதன் கூடவே 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அதில் நாம் வேக வைத்து எடுத்துவைத்த Vicken Chunks சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அதில் 1 கொத்து கருவேப்பிலை, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் தனியா தூள், 1/4 டீஸ்பூன் கரம்மசாலா, 1/4 டீஸ்பூன் சீரகத்தூள், சிறிது கஸ்தூரிமேத்தி, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்துவிடவும். மசாலா அதில் நன்கு கலந்த பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்துவிடவும். பின் அதை 5 நிமிடம் மூடி வைக்கவும்.

செய்முறை: 5

how to make rajahmundry biryani recipe

அதன் பின் இந்த மசாலாவை எடுத்து ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும். அடுத்து நாம் வேகவைத்து எடுத்துக்கொண்ட அரிசியை அதன் மீது வைத்து கூடாக வாழை இலையில் வைத்து சாப்பிடுங்கள்..! அதன் டேஸ்ட் வேற மாறி இருக்கும்..!

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி எந்த பிரியாணியாக இருந்தாலும் இது தாங்க ஏத்த சைடிஸ்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement