சைவ பிரியர்கள் உங்களுக்காக சைவ மீன் குழம்பு அதுவும் நெத்திலி மீன் குழம்பு..!

Advertisement

சைவ மீன் குழம்பு செய்வது எப்படி?

சைவ பிரியர்களுக்காக இந்த பதிவு என்பதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. காரணம் எனக்கும் அசைவம் பிடிக்காது ஆகவே என்னை போன்ற ஒருவருக்கு இந்த பதிவின்  வாயிலாக சைவ நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கப் போகிறோம். அனைவருக்கும் மீன் பிடிக்கும் அதனுடைய நறுமணம் பிடிக்கும் சிலருக்கு அந்த மனம் வந்தால் அந்த இடத்தில் கூட நிற்கமாட்டார்கள். இருந்தாலும் அதன் ருசி எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கும். அந்த காரணத்தால் அதனை ஒரு நாள் சாப்பிட்டு பார்த்தோம் ஆனால் அதனை எனது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அதனை சாப்பிடுவது இல்லை. இருந்தாலும் அதனுடைய மனம் என்னைவிட்டு போகவில்லை என்று நினைக்கும் நபர்களுக்காக மீன் இல்லாத நெத்திலி மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் வாயிலாக கான்போம்..!

மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

முளைகட்டிய பச்சை பயிர்- ஒரு கப்

துருவிய தேங்காய் – 1/2 கப்

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு -10

உப்பு தேவையான அளவு

வாழை இலை -1

எண்ணெய் சிறிதளவு

வெந்தயம் -1/2 ஸ்பூன்

கடுகு, உ. பருப்பு – 12 ஸ்பூன்

பூண்டு – 10 அல்லது 15

சின்ன வெங்காயம் – 15

பச்சை மிளகாய் -1 நீளமாக நறுக்கியது

கறிவேப்பிலை -1 கொத்து

பெரிய வெங்காயம் -3 அரைத்து வைத்துக்கொள்ளவும்

தக்காளி -2

பெருங்காயம் சிறிதளவு

மிளகாய் தூள் – 1. 1/2 ஸ்பூன்

மல்லித்தூள் – 2  ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

மிளகு தூள் – சிறிதளவு

புளி – எலுமிச்சை பழம் போல்

தேங்காய் பால் – 1/2 கப்

கொத்தமல்லி – சிறிதளவு

ஸ்டேப் -1

எலுமிச்சை பழம் போல் புளியை எடுத்து அதனை கரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு பெரிய வெங்காயம் தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அதேபோல் தக்காளி தனியாக அரைத்து கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும்.

முக்கியமாக முதல் நாள் காலையில் முளைகட்டி  பயிரை எடுத்துக்கொள்ளவும், சின்ன வெங்காயம் இரண்டாக நறுக்கியது, பச்சை மிளகாய் -1 நீளமாக நறுக்கியது, துருவிய தேங்காய் எடுத்து வைத்துக்கொள்ளவும், அதேபோல் தனியாக ஒரு கப்பில் தேங்காய் பால் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம். இதனை அனைத்தும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -2

 சைவ மீன் குழம்பு செய்வது எப்படி

இப்போது முளைகட்டிய பயிரை எடுத்துக்கொண்டு அதனை மிக்சி ஜாரில் போட்டு அதன் கூடவே துருவிய தேங்காய், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக்கூடாது.

ஸ்டேப் -3

 சைவ மீன் குழம்பு செய்வது எப்படி

இப்போது அரைத்த பொருட்களை ஒரு பெரிய மீன் போல் செய்துகொள்ளவும். அதன் பிறகு ஒரு வாழையிலையை லேசாக சூடுசெய்துகொள்ளவும்.  பின் அந்த  வாழையிலையில் எண்ணெய் தடவி கொண்டு இலையின் நடுவில் நீங்கள் செய்த மீனை வைத்து இலையின் ஒரு காம்பு போல் இருக்கும் அதனை அந்த மீனின் நடுவில் சொருகிக்கொள்ளவும். இப்போது நன்கு மடித்து கொள்ளவும்.

ஸ்டேப் -4

இப்போது ஒரு இட்லி பானையில் தண்ணீர் வைத்து இட்லி தட்டில் மடித்து வைத்த இலையை  10 நிமிடம் மூடிக்கொள்ளவும்.

ஸ்டேப் -5

பின்பு இறக்கி   வைத்துவிடவும். அதன் பின் ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெந்தயம் -1/2 ஸ்பூன்,  கடுகு, உ பருப்பு – 12 ஸ்பூன் சேர்த்து பெரிய விடவும்.

ஸ்டேப் -6

பொரிந்த பின் அதில் 10 அல்லது 15 பூண்டு சேர்த்து, அதன் கூடவே சின்ன வெங்காயம் சேர்த்து இரண்டையும் வதக்கவும்.

ஸ்டேப் -7

வதக்கிய பின் பச்சை மிளகாய், சேர்த்து வதக்கும் போதே அதில் கருவேப்பிலை  சேர்த்து வதக்கவும். இந்த பொருட்களை சேர்த்த பின் அரைத்துவைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -8

அரைத்த தக்காளி

அனைத்தும் வதங்கிய பின் தனியாக அரைத்துவைத்த தக்காளியை அதில் சேர்த்து பச்சை தன்மை போகும் வரை வதக்கிய பின் அதில் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும். காரத்திற்காக மிளகாய் தூள் – 1.1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 2  ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகு தூள் – சிறிதளவு சேர்த்து கடைசியாக கரைத்து வைத்த புளி கரைசலை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டுக்கொள்ளவும். 10 நிமிடம் மூடி வைக்கவும்.

ஸ்டேப் -9

 சைவ மீன் குழம்பு செய்வது எப்படி

இப்போது இட்லி பானையில் வைத்துள்ள மீனை எடுத்து நடுவில்ல் சொருகி வைத்துள்ள காம்பை எடுத்துவிடவும். இப்போது அழகா மீன் போல் மிருதுவாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -10

 சைவ மீன் குழம்பு செய்வது எப்படி

அடுப்பில் வைத்துள்ள குழம்பில் தேங்காய் பால் சேர்க்கவேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லையென்றால் வேண்டாம். இப்போ அதன் கூட கொத்தமல்லி சேர்த்து கடைசியாக மீனை சேர்த்து 2 நிமிடம் வேகவைக்கவும்.

மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement