மிகவும் ருசியான கருவேப்பிலை முட்டை மசாலா செய்வது எப்படி..?

Boiled Egg Recipe in Tamil

இன்றைய சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது கருவேப்பிலை முட்டை மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தான். பொதுவாக குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை என்றாலே பிடிக்காது. அதனால் அந்த முட்டையை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் நீங்கள் இந்த பதிவில் கூறியுள்ள வேகவைத்த கருவேப்பிலை முட்டை மசாலா ரெசிபியை ஒருமுறை செய்து கொடுத்துப்பாருங்க..! அதன் பிறகு அவர்களே மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

Healthy Boiled Egg Recipe in Tamil:

Boiled Egg Recipe in Tamil

முதலில் இந்த கருவேப்பிலை முட்டை மசாலா செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

 1. முட்டை – 8
 2. கருவேப்பில்லை – 1 கைப்பிடி அளவு 
 3. மிளகு – 2 டீஸ்பூன் 
 4. சீரகம் – 2 டீஸ்பூன் 
 5. சோம்பு – 2 டீஸ்பூன் 
 6. இஞ்சு – 2 சிறிய துண்டு 
 7. பூண்டு – 10 பற்கள்
 8. சின்ன வெங்காயம் – 14 
 9. மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
 10. மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
 11. எண்ணெய் – தேவையான அளவு 
 12. உப்பு – தேவையான அளவு
 13. தண்ணீர் – தேவையான அளவு

இதையும் படியுங்கள்=> கல்கத்தா ஸ்பெஷல் அண்டா ரோல் செய்வது எப்படி..?

செய்முறை:   

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 8 முட்டைகளையும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு அடுப்பில் நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை தோல் உரித்து இரண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 2 டீஸ்பூன் மிளகு, 2 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் சோம்பு, 2 சிறிய துண்டு இஞ்சி, 10 பற்கள் பூண்டு மற்றும் 14 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

அடுத்து மிக்சியில் இருக்கும் பொருட்களுடன் 2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 கைப்பிடி அளவு கருவேப்பில்லை, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மசாலா பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Simple boiled egg fry in tamil

பின்னர் நம் முன்னரே வேகவைத்து நறுக்கிவைத்துள்ள முட்டையின் மீது நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை தடவிக்கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி  நாம் மசாலா தடவி வைத்துள்ள முட்டையை அதனுடன் சேர்த்து முன்னும் பின்னும் பிரட்டி போட்டு நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது மிகவும் ருசியான கருவேப்பிலை முட்டை மசாலா தயார் ஆகிவிட்டது. நீங்களும் இந்த கருவேப்பிலை முட்டை மசாலாவை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு