Sola Adai Recipe in Tamil
பொதுவாக அடை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வீட்டில் பலவகையான அடை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதாவது அரிசி அடை, கார அடை, கம்பு அடை போன்ற பலவகையான அடை செய்து இருப்பீர்கள். ஆனால் சோள அடை செய்து இருக்கிறீர்களா..! ஆமாங்க சோளத்திலும் அடை செய்யலாம். சோளத்தில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. இவற்றை நாம் உணவாக செய்து உண்ணும் போது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே இச்சத்துக்கள் நிரம்பிய சோளத்தை வைத்து எப்படி அடை செய்வது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
சோள அடை செய்வது எப்படி.?
சோள அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- சோளம்- 2
- பச்சரிசி மாவு- 3 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- பெரிய வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- சோம்பு- 1 ஸ்பூன்
- பட்டை மிளகாய்- 2
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை- 2 கொத்து
சோள அடை செய்முறை:
ஸ்டேப்: 1
முதலில் சோளத்தை உதிர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மாவாக அரைத்து கொள்ளுங்கள்.
தோசை மாவு இல்லாமல் சுவையான பிரெட் தோசை செய்வது எப்படி? |
ஸ்டேப்: 2
அதன் பின், ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் நாம் அரைத்து வைத்த சோள மாவை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் பச்சரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விடுங்கள்.
ஸ்டேப்: 3
இவற்றை எல்லாம் நன்றாக கலந்த பிறகு, அதனுடன் சோம்பு, கொரகொரப்பாக அரைத்த பட்டை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து, கல் சூடானதும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் உருட்டி வைத்த சோள உருண்டையை ஒவ்வொன்றாக எடுத்து அடையாக சுட்டுக் கொள்ளுங்கள்.
உடல் எடையைக் குறைக்க வேண்டுமா..? அப்போ நவதானிய அடையை இப்படி செய்து சாப்பிடுங்கள்..! |
ஸ்டேப்: 5
அடை லேசாக சிவந்ததும் அதன் மேல் சிறிதளவு எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்தால் 10 நிமிடத்திலேயே சூடான சுவையான சோள அடை ரெடி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |