பொங்கல் ஸ்பெஷல் 9 காய்கறிகள் சேர்த்து சாம்பார் இப்படி வையுங்க..! பொங்கல் காலியாகிடும்.!

Advertisement

பொங்கல் சாம்பார் செய்முறை

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை வர இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. பொங்கலுக்கு வீடெல்லாம் சுத்தம் செய்து முடித்திருப்பீர்கள். பொங்கல் அன்றைக்கு என்ன செய்வது, என்னென்ன சமையல் செய்வது பேசி கொண்டிருப்பீர்கள். இப்போ சரியான நேரத்தில் தான் இந்த பதிவை படிக்கிறீர்கள். பொங்கல் அன்று ஒன்று சாம்பார் வைப்பீர்கள், இல்லையென்றால் புளிக்குழம்பு வைப்பீர்கள். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் பொங்கல் சாம்பாரை சுவையாக வைப்பது எப்படி என்று படித்து தெரிந்து கொள்வோம். இந்த மாதிரி சாம்பார் வைத்தீர்கள் என்றால் பொங்கல் எல்லாமே காலியாகிடும்.

சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:

  1. கத்தரிக்காய் – 1/4 கப் 
  2. அவரைக்காய் –1/4 கப் 
  3. பூசணிக்காய் –1/4 கப் 
  4. கேரட்-1/4 கப் 
  5. பீன்ஸ் –1/4 கப் 
  6. சவ்சவ் –1/4 கப் 
  7. பரங்கிக்காய்- 1/4 கப் 
  8. முருங்கைக்காய்-1/4 கப் 
  9. சர்க்கரை வள்ளி கிழங்கு –1/4 கப் 
  10. துவரப்பருப்பு –1/4 கிலோ
  11. மஞ்சள் தூள் – 1தேக்கரண்டி
  12. பச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்ற அளவு
  13. சின்ன வெங்காயம் – 10
  14. தக்காளி –1
  15. புளி- தேவையான அளவு

சாம்பார் செய்முறை:

முதலில் 1/4 கிலோ பருப்பை எடுத்து கழுவி விட்டு வேக வைக்கவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

pongal sambar recipe in tamil

பருப்பு வேகும் நேரத்தில் மேல் கூறப்பட்டுள்ள காய்கறிகளை கட் பண்ணி வைக்கவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம்,  தக்காளி வதங்கிய பிறகு வேக வைத்த பருப்பை மசித்து சேர்த்து கொள்ளவும். பருப்பு தண்ணீரையும் ஊற்றி கொள்ளவும்.

pongal sambar recipe in tamil

பின் அதில் நறுக்கி வைத்த காய்கறிகளையும் சேர்த்து கிளறி விடவும். அதில் சிறிதளவு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

காய்கறிகள் வெந்து, மசாலாக்களின் பச்சை வாசனை நீங்கியதும் புளி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும். பிறகு சிறிதளவு தேங்காய், சோம்பு வைத்து அரைத்த தேங்காவையும் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்.

pongal sambar seivathu eppadi

பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் நன்கு சூடேறியதும் கடுகு ஒரு தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி  சிறிதளவு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து விடுங்கள். தாளித்த இந்த கலவையை சாம்பாரில் ஊற்றுங்கள். அவ்வளவு தான் சுவையான பொங்கல் சாம்பார் தயார்..! இந்த பொங்கலுக்கு உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள் நன்றி வணக்கம்.

இதையும் செய்து பாருங்கள் ⇒ கோவில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி

Sakkarai Pongal Recipe in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement