உடைத்த முட்டை குழம்பு செய்வது எப்படி? | Udaitha Egg Kulambu in Tamil
முட்டையில் நாம் முட்டை பொரியல், ஆம்லேட், கலக்கி, முட்டை குழம்பு என விதவிதமான டிஷ்களை பார்த்திருப்போம். முட்டை குழம்பு என்றால் மசாலா அரைத்து கொதிக்க வைத்து அதில் வேக வைத்த முட்டையை போட்டு கொதிக்க வைத்து இறக்குவார்கள். ஆனால் இன்று நாம் செய்யப்போகும் குழம்பு சற்று வித்தியாசமானது. அப்படி என்ன வித்தியாசமான குழம்பு என்று தானே யோசிக்கிறிர்கள், இந்த பதிவில் நாம் முட்டையை உடைத்து குழம்பு வைக்க போகிறோம், வாங்க அதை எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை – 1
- ஏலக்காய் – 2
- கிராம்பு – 3
- சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் – 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- கீறிய பச்சை மிளகாய் – 2
- கருவேப்பிலை – சிறிதளவு
- மஞ்சள் தூள் – கால் டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய தக்காளி – 2
- தண்ணீர் – சிறிதளவு
- தேங்காய் அரைத்தது – தேவையான அளவு
- நறுக்கிய கொத்தமல்லி – தேவையான அளவு
- முட்டை – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப்: 1
- Udaithu Utriya Muttai Kulambu in Tamil: முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் கடுகு, 1 பட்டை, 2 ஏலக்காய், 3 கிராம்பு சேர்த்து கொள்ளவும்.
ஸ்டேப்: 2
- பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் சோம்பு சேர்த்து கிளறவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம் இரண்டு சேர்த்து வதக்கவும் (சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்).
- அதன் பிறகு 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கீறிய பச்சை மிளகாய் 2, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப்: 3
- Udaithu Oothiya Muttai Kulambu: வெங்காயம் பொன்னிறமான பிறகு அதில் கால் டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் (நீங்கள் காரத்திற்கு ஏற்பவும் மிளகாய்த்தூள் சேர்த்து கொள்ளலாம்)
ஸ்டேப்: 4
- பின் அதில் நறுக்கிய 2 தக்காளி (தக்காளி பேஸ்ட் செய்தும் குழம்பில் சேர்க்கலாம்). அதன் பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப்: 5
- Udaithu Vitta Muttai Kulambu in Tamil: பேஸ்ட் ஆன பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் தேங்காய் அரைத்து ஊற்றி கொள்ளவும் (தேங்காய் வேண்டாம் என்பவர்கள் ஒரு முட்டையை கலக்கி அதில் சேர்க்கலாம்)
ஸ்டேப்: 6
பின்னர் அதில் நீங்கள் வைத்திருக்கும் முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும், பின்பு மூடி 5 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைக்கவும். 5 நிமிடம் கழித்து முட்டையை திருப்பி சிறிது நேரம் வேகவைக்கவும்.
ஸ்டேப்: 7
- Udaithu Vitta Muttai Kulambu: பின்னர் அதில் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சூப்பரான உடைத்த முட்டை குழம்பு தயார்.
- இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சாப்பிட இந்த உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு சுவையாக இருக்கும்.
கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு வைப்பது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |