உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி? | Urulaikilangu Bonda Seivathu Eppadi Tamil
டீ கடைக்கு அதிகமாக போடுவது வடை பஜ்ஜி தான். அதன் பின் சில கடைகளில் மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் சூடா உருளைக்கிழங்கு போண்டா போடுவார்கள்..! அதற்கு என்று தனியாக கூட்டம் வரும்..! ஏனென்றால் அதில் சேர்க்கும் பொருட்கள் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும், அதுவும் மாலை நேரத்தில் காரணம் சாப்பிட தோன்றும் நேரத்தில் சூடாக உருளைக்கிழங்கு போண்டா போட்டால் யாரு தான் சாப்பிடாமல் கடையை தாண்டுவார்கள் சொல்லுங்க அப்படி என்ன இருக்கு அதையும் வீட்டில் செய்து பாத்திடலாம் வாங்க..!
Urulaikilangu Bonda Recipe in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
- உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
- வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு – 1 கப்
- அரிசி மாவு – 1/2 கப்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மல்லி தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
- சோடாப்பு – 1/4 டீஸ்பூன்
- சோம்பு – சிறிதளவு
- கடுகு – சிறிதளவு
- புதினா இலை – சிறிதளவு
- கறிவேப்பிலை சிறிதளவு
- ஆயில் – பொரிப்பதற்கு
- உப்பு – தேவையான அளவு
Urulaikilangu Bonda Seimurai:
ஸ்டேப்: 1
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்து வரும் நிலையில் சோம்பு போடவும்.
ஸ்டேப்: 2
சோம்பு பொரிந்த பின் பச்சை மிளகாய் சேர்க்கவும், அது கொஞ்சம் பொரிந்த பின் கடைசியில் கறிவேப்பிலையை போடவும். அடுத்து நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும். அது நன்றாக வதங்க வேண்டும்.
ஸ்டேப்: 3
அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1/2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். அதனை ஒரு முறை கலந்து விடவும், பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன், மல்லி தூள் – 1/4 டேபிள் ஸ்பூன் சேர்த்து ஒரு முறை கலந்து விடவும்.
ஸ்டேப்: 4
பின்பு அதில் நாம் அவித்து வைத்த உருளைக்கிழங்கை கைகளால் மசித்து விடவும். அதன் பின் அதில் தேவையான அளவு உப்பு கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து விடவும் இதில் தேவை என்றால் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். இப்போது கலந்து பின் மசாலா ரெடி ஆகிவிட்டது. அதனை உருண்டை உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 4
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு 1 கப், அதன் பின் அதில் அரிசி மாவு 1/2 கப், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும், இதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதிலும் மிச்சம் வைத்துள்ள இஞ்சி பூண்டு சேர்க்கவும், கடைசியாக குக்கிங் சோடா சேர்க்கவும்.
பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 5
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகட்டும் அதன் பின் உருட்டிவைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்துக்கொள்ளவும் அடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் உருளைக்கிழங்கு போண்டா ரெடி..!
ஒரு முறையாவது இந்த குழம்பை செய்து சாப்பிடுங்கள்..! அப்படி ஒரு டேஸ்ட்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |