சுவையான வெஜிடபிள் பிரியாணி | Veg Biryani Recipe in Tamil

Advertisement

வெஜிடபிள் பிரியாணி செய்யும் முறை | Vegetable Biryani Seivathu Eppadi

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இந்த பிரியாணியில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். ஆனால் அசைவ பிரியர்கள் முதல் சைவ பிரியர்கள் வரை சாப்பிடும் பிரியாணி என்றால் அது வெஜிடபிள் பிரியாணி தான். நாம் இந்த பதிவில் சுவையான வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. பிரிஞ்சி இலை – 2
  2. பட்டை – 2
  3. லவங்கம் – 2
  4. ஏலக்காய் – 2
  5. ஜாதிபத்திரி – 2
  6. அன்னாசிப்பூ – 2
  7. வெங்காயம் – 2 (நறுக்கியது)
  8. தக்காளி – 2 (நறுக்கியது)
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  10. மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
  11. புதினா – சிறிதளவு
  12. கொத்தமல்லி – சிறிதளவு
  13. பச்சை மிளகாய் – 4
  14. தயிர் – 1 கப்
  15. பச்சை பட்டாணி – 1 கப் (ஊறவைத்தது)
  16. ப்ரோக்கோலி – 1 கப்
  17. கேரட் – 1 கப்
  18. பீன்ஸ் – 1 கப்
  19. நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி
  20. பாசுமதி அரிசி – தேவையான அளவு

செய்முறை:

Vegetable Biryani Seivathu Eppadi

ஸ்டேப்: 1

  • முதலில் தேவையான அளவு பாசுமதி அரிசியை கழுவி விட்டு 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

  • வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?: பின் குக்கரில் நல்லெண்ணெய் 1 குழி கரண்டி சேர்க்கவும். பின் அதில் அன்னாசிப்பூ 2, ஜாதிபத்திரி 2, பட்டை 2, லவங்கம் 2, பிரிஞ்சி இலை 2, ஏலக்காய் 2, புதினா சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கவும்.
பீப் பிரியாணி செய்வது எப்படி?

ஸ்டேப்: 3

  • Vegetable Biryani Seivathu Eppadi: வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், நறுக்கிய தக்காளி 2, பச்சை மிளகாய் 4 சேர்த்து மிக்ஸ் பண்ணி வதக்கவும்.

ஸ்டேப்: 4

  • Veg Biryani Recipe in Tamil: வதக்கிய பின்பு அதில் 1 கப் தயிர் சேர்த்து கிண்டவும். பின்னர் அதில் ஊற வைத்த பச்சை பட்டாணி 1 கப், கேரட் 1 கப், பீன்ஸ் 1 கப், ப்ரோக்கோலி 1 கப் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

ஸ்டேப்: 5

  • Veg Biryani Recipe in Tamil: அதன் பின் மிளகாய்த்தூள் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு மற்றும் ஊறவைத்த பாசுமதி அரிசி, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கிளரவும். பின்னர் குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். மூன்று விசில் வந்தவுடன் பிரஷர் போன பிறகு குக்கரை திறக்கவும்.
  • சாதத்தை பக்கவாட்டில் கிளறி விடவும். இப்போது சூடான சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.
பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement