Veg Salna for Parotta Recipe in Tamil
எப்போதும் வீட்டில் தோசை இட்லி, புரோட்டா என அனைத்திற்கும் ஒரே சாம்பார் சட்னி என்று அரைத்த உங்களுக்கும் அலுத்துப் போயிருக்கும், சாப்பிட்ட மற்றவர்களுக்கும் அலுத்துப் போயிருக்கும். ஒரே ரெசிபி செய்ய யாருக்கு தான் பிடிக்கும். ஆகவே இன்றைய பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக கரி இல்லாமல் சப்பாத்தி முதல் தோசை வரை தொட்டு சாப்பிட கூடிய அருமையாக டிஸ் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள போகிறோம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Veg Salna for Parotta Recipe in Tamil:
முதலில் கொஞ்சம் சுடு தண்ணீரில் 7 முந்திரி கசகசா சேர்த்து ஊறவைக்கவும். முந்திரி இல்லையென்றால் பொட்டுக்கடலை சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து ஒரு முறை வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து 2 வெங்காயம் பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும், பின்பு அதனுடன் 2 தக்காளி சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும். வேகமாக வதங்குவதற்கு உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்,
இதையும் செய்து சாப்பிடுங்கள் 👉👉 கறி இல்லை காய் இல்லை ரோட்டுக்கடை பரோட்டா குருமா டேஸ்ட் சும்மா அள்ளும்..!
அடுத்து அதில் 1.1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும். இப்போது அனைத்தும் வதங்கட்டும்.
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். 4 டேபிள் ஸ்பூன் தேங்காய், 4 சின்ன வெங்காயம், கொஞ்சம் சோம்பு, ஊறவைத்த முந்திரி கசகசா, அதில் இருக்கும் தண்ணீரையும் இதில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இப்போது வதங்கும் வெங்காயத்தில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் தூள், 1 டீஸ்பூன் தனியா தூள், கறிமசாலா 1 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக வதங்கட்டும். அடுத்து அதில் 1 கைப்பிடி அளவு புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்பு நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை அதில் சேர்க்கவும். அதனை கொஞ்ச நேரம் கரண்டி வைத்து கலந்துகொண்டு இருக்கவேண்டும். பின்பு தான் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவேண்டும். அடுத்து உப்பு சரியாக உள்ளதாக என்பதை பார்த்துவிட்டு கொதித்த பின் இறக்கி உங்களுக்கு பிடித்த தோசை, இட்லி, சேர்த்து சாப்பிடலாம்.
இதையும் செய்து சாப்பிடுங்கள் 👉👉👉 பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்ன சமையல் என்று கேட்கும் அளவிற்கு அசத்தலான குருமா இது தான்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |