கிரிக்கெட் வீரர் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Captain Dhoni Net Worth in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் கிரிக்கெட் வீரரான கேப்டன் தோனியின் சொத்து மதிப்பு பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். கிரிக்கெட் விளையாட்டு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. உலக கிரிக்கெட் வீரர்களையே வியக்க வைத்தவர் தான் தோனி. தல தோனி என்று அழைக்க கூடிய இவர் மிகவும் பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். தோனி தன்னுடைய திறமையால் இந்திய அணிக்கு பல உலக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம்..!

இதையும் பாருங்கள் –> கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

கேப்டன் தோனியின் வரலாறு: 

Captain Dhoni Net Worth in Tamil

மகேந்திர சிங் தோனி என்று அழைக்கப்படும் இவர் 1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பீகாரில் உள்ள ஜார்க்கண்ட் என்னும் ஊரில் பிறந்தார். இவர் பான் சிங் மற்றும் தேவகி தேவி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.

இவர் ஜூலை 4, 2010 அன்று சாக்ஷி சிங் ராவத் என்பவரை திருமணம் செய்து  கொண்டார். இவர்களுக்கு ஜிவா தோனி என்ற 1 மகள் இருக்கிறார்.

இவர் சுருக்கமாக எம்.எஸ்.தோனி என்று அழைக்கப்படுகிறார். தோனி இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவரும் ஆவார்.

செரீனா வில்லியம்ஸ் சொத்து மதிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா..?

கேப்டன் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு..? 

2011 ஆம் ஆண்டு இந்தியப் பகுதி ராணுவம் மகேந்திர சிங் தோனிக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை வழங்கியது. தோனி ICC -யின் சிறந்த வீரர் விருதை 2 முறை பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்று போற்றப்படுகிறார்.

இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் யூத் ஐகான் விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு De Montfort பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

 இத்தனை விருதுகளை பெற்ற கேப்டன் தோனியின் 2022 ஆண்டின் சொத்து மதிப்பு தோராயமாக $113 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பிற்கு 940 கோடி என்று கூறப்படுகிறது. இவருடைய சராசரி ஆண்டு சம்பளம் 50 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது பணக்கார கிரிக்கெட் வீரர் கேப்டன் தோனி என்று கூறப்படுகிறது.  

இதையும் பாருங்க –> மூன்றாம் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement