Advertisement
அளபெடை என்றால் என்ன விளக்குக | Alapadai in Tamil
வணக்கம் நண்பர்களே தமிழ் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும் அதன் அர்த்தங்களும் புதிதாகவும் யோசிக்க தூண்டும் வகையிலும் இருக்கும். தமிழில் மிகவும் முக்கியம் இலக்கணம். அதனை கற்றுக்கொண்டால் சுலபமாக இருக்கும். அந்த வகையில் இலக்கணத்தில் இந்த பதிவில் அளபெடை என்றால் என்ன என்பதையும் அதனை பற்றியும் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
பெயர்ச்சொல்லின் வகைகள் |
அளபெடை என்றால் என்ன:
- ஒரு செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் அந்த ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துக்கள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை அளபெடை என்று சொல்வார்கள்.
அளபெடை எத்தனை வகைப்படும்:
- இயற்கை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- செய்யுளிசை அளபெடை என நான்கு வகைப்படும்.
இயற்கை அளபெடை:
- இயலாகவே சொல்லில் வரும் எழுத்துக்கள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர்.
சொல் வகைகள் |
சொல்லிசை அளபெடை என்றால் என்ன:
- ஒரு சொல்லின் பொருளையே மாற்றுவது சொல்லிசை அளபெடை. அதாவது ஒரு பெயர்ச்சொல்லை வினையெச்ச சொல்லாக திரிவது சொல்லிசை அளபெடை ஆகும்.
(எடுத்துக்காட்டாக)
- உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்
இன்னிசை அளபெடை சான்று தருக:
- இன்னிசை அளபெடை என்பது இனிமை + இசை அதாவது அந்த இனிய ஓசைக்காக மட்டுமே அளவெடுப்பது இன்னிசை அளபெடை என்பது ஆகும்.
- செய்யுளில் ஓசை குறையாத போதும். இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
(எடுத்துக்காட்டாக)
- கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
செய்யுளிசை அளபெடை என்றால் என்ன:
- செய்யுளில் ஓசை குறையும் போது அளபெடுத்து அந்த செய்யுளை நிறைவு செய்வது அளபெடை ஆகும்.
(எடுத்துக்காட்டாக)
- தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
இலக்கணம் என்றால் என்ன |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
Advertisement