இரட்சிப்பு Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இரட்சிப்பு என்றால் என்ன.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. இவ்வுலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் பழமையான தமிழ் வார்த்தைக்கான அர்த்தம். அதாவது, நமக்கு தெரியாத வித்தியாமான தமிழ் வார்த்தைகள் இருக்கும். அவற்றின் அர்த்தம் பற்றி நமக்கு தெரியாது. அப்படி நமக்கு தெரியாமல் இருக்கும் வார்த்தைகளில் ஒன்று தான் இரட்சிப்பு என்ற வார்த்தை.
இரட்சிப்பு என்ற வார்த்தை கிறித்தவ மொழியில் பயன்படுத்தப்படும் வார்த்தை ஆகும். அதனை பற்றி (இரட்சிப்பு என்றால் என்ன) விவரமாக பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இரட்சிப்பு என்றால் என்ன.?
இரட்சிப்பு என்றால் கிருத்துவ மதத்தில் பாதுகாக்கப்படுதல், விடுவிக்கப்படுதல் என்று அர்த்தம் ஆகும். அதாவது, இரட்சிப்பு தீங்கு அல்லது இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றப்படும் அல்லது பாதுகாக்கப்படும் நிலையை குறிக்கிறது.
இன்னும் தெளிவாக ஒரு வரியில் சொல்லப்போனால், ஆபத்து அல்லது துன்பத்திலிருந்து மீட்கப்படுகிறதே இரட்சிப்பு ஆகும்.
இரட்சிப்பு என்ற வார்த்தை வெற்றி, ஆரோக்கியம், அல்லது பாதுகாப்பு ஆகிய வார்த்தைகளின் கருத்தை கொண்டுள்ளது.
கிறிஸ்தவ முறையில் இரட்சிப்பு என்பது நாம் தேவனுடைய “கோபத்தில்” இருந்து மீட்கப்படுகிறோம், அதாவது பாவத்திற்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து மீட்கப்படுகிறோம் (ரோமர் 5:9; 1 தெசலோனிக்கேயர் 5: 9). நம்முடைய பாவங்கள் அனைத்தும் தேவனிடமிருந்து நம்மை பிரிக்கின்றன.
எனவே கிறிஸ்தவ முறையில் இரட்சிப்பு என்றால், பாவத்தை அகற்றுவதை குறிக்கிறது.
ஒருவர் செய்யும் பாவம் மற்றும் அதன் விளைவுகளிலிருந்து அவனை விடுதலை செய்தல் அல்லது மீட்கபடுதல் ஆகும். வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இரட்சிப்பு என்பது பாவமன்னிப்படைந்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுவதற்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது.
Baptism என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
இரட்சிப்பு Meaning in English:
- இரட்சிப்பு என்ற தமிழ் வார்த்தைக்கு Salvation என்பது ஆங்கில வார்த்தையாக இருக்கிறது.
- இரட்சிப்பு (Salvation) என்பது லத்தீன் மொழியிலிருந்து வந்தது ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |