கன்னி நாய் விலை..!
நாம் எங்கயாவது வெளியே சென்றுவிட்டு திரும்ப வீடு திரும்பும்போது நம்மைப் பார்த்ததும், குறைத்துக்கொண்டே நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்து, வாலை ஆட்டிக்கொண்டே நம் மீது தொத்துக்கால் போடும் நாயின் முகத்தைப் பார்க்கும் அந்த ஒரு நிமிடத்திலேயே கவலைகள் காணாமல் போய்விடும். பலருக்கு நாய் வளரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். நாய்களில் பல வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் கன்னி இந்த கன்னி நாய் பற்றிய தகவல்களை தான் நாம் இந்த பதிவில் படித்தறிய போகிறோம். கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நான்கும் நம் தமிழகத்தின் இனமாகும். இந்த நான்கு நாய்களுமே அதிக மோப்ப சக்தி கொண்டது. சரி வாங்க கன்னி நாய் விலை, அதனை வளர்க்கும் முறை போன்ற தகவல்களை இங்கு நாம் காண்போம்.
கன்னி நாய் பற்றிய தகவல்கள்:
கன்னி தமிழ்நாட்டை சார்ந்த ஒரு நாயினமாகும். இது தமிழ்நாட்டின் தென் பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.
இந்த பகுதியில் வாழும் மக்கள் இந்த நாய்களை காட்டு முயல் போன்ற அதி வேகமாக ஓடும் சிறு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி வந்தனர்.
கன்னி நாய் பார்ப்பதற்கு கருப்பு நிறமாகவும் கால்கள் பிரவுன் நிறத்திலும் இருக்கும். நெஞ்சுப்பகுதி விரிந்தும், வயிற்றுப்பகுதி இறங்கியும், கால்கள் சற்று நீளமாகவும் இருக்கும். ஒரு நடுத்தர அளவு நாய், இவை 25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ தோள் உயரம் இருக்கும்.
எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்கும் இதன் உடல் அமைப்புதான் வேகமாக பாய்ந்து ஓடிச் செல்லவும், விலங்குளை விரட்டவும் உதவுகிறது.
கன்னி நாய் விலை நிலவரம்:
கன்னி நாய் குட்டி விலை: கன்னி 30 நாள் குட்டியாக ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது விற்பனை செய்யப்படுகிறது.
எடை:
இந்த கன்னி நாய்கள் 13.6 முதல் 32.5 கிலோகிராம்கள் (30 முதல் 72 lb) எடை வரை இருக்கும்.
கன்னி நாய் வளர்க்கும் முறை:
இது ஒரு நாட்டு நாய் வகையை சேர்ந்தது என்பதினால்.. சாதாரணமாக நாம் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். மேலும் பெடிகிரி கொடுக்கலாம். இந்த நாய் குட்டியை வளர்க்கும் போது இதற்கு அதிக பயிற்ச்சி கொடுத்து வளர்க்க வேண்டும்.
நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்? |
நாய்கள் பற்றிய தகவல் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |