கலங்கரை விளக்கம் | Kalangarai Vilakkam Information in Tamil

Kalangarai Vilakkam Information in Tamil

Information About Lighthouse in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் கலங்கரை விளக்கம் பற்றிய சில தகவல்களை காண்போம்.. கலங்கரை விளக்கம் என்பது மீனவர்கள் இரவு நேரத்தில் கடலுக்கு செல்லும் போது அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவிக்கரம் செய்வதற்காக தான் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. வாங்க மேலும் கலங்கரை விளக்கம் பற்றிய சுவாரஸ்யமான தகவலை படித்தறியலாம்.

மனித மூளை பற்றிய தகவல்கள்

புதுவையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம்:

புதுச்சேரி மாவட்டத்தில் 2 அமைந்துள்ளது: அவை

 1. பிரெஞ்சு ஆட்சியாளர்களால் 19-ம் நூற்றாண்டில் பழைய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.
 2. இந்திய அரசாங்கத்தால் 20-ம் புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம்:

உலக மக்கள் அனைவரும் விரும்பும் இடமாக அமைந்துள்ளது சென்னை மெரீனா கடற்கரை. அந்த கடற்கரையில் தான் கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளது.

சென்னை மெரீனா கலங்கரை விளக்கத்தின் சிறப்பம்சம்:

 • சென்னை மெரீனா கலங்கரை விளக்கத்தில் 10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் அமைந்துள்ளது.
 • குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 • கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் மக்கள் பிரம்மிக்கும் அளவிற்கு விளக்குடன் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
 • சென்னை மெரீனாவில் 45 மீட்டர் அளவு உயரத்தில் கலங்கரை விளக்கமானது கட்டப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கம் மொத்தம் எத்தனை?

இந்தியாவில் மொத்தம் 180 கலங்கரை விளக்கங்கள் அமைந்துள்ளது.

கலங்கரை விளக்கம் பயன்கள்:

 • ‘‘பயணம் செய்யும் போது கப்பல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்கும், கப்பல் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் லைட்ஹவுஸ் உதவுகிறது.
 • ஒளியால் மட்டுமின்றி, ரேடியோ அலைகள் மூலமாகவும் வழிகாட்டும் பணியையும் லைட்ஹவுஸ்கள் செய்கின்றன.
 • நிறம், வெளிச்சத்தின் அளவு மூலமாக லைட்ஹவுஸ் இருக்கும் பகுதியை கேப்டன்கள் புரிந்து கொள்வார்கள். இதற்கென கப்பல்களிடம் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் அமைந்துள்ள பழைய கலங்கரை விளக்கத்தின் சிறப்பு:

 • இந்த பழைய கலங்கரை விளக்கம் 29 மீட்டர் அளவினை கொண்டுள்ளது.
 • புதுச்சேரியில் முதன் முதலாகக் கொடி ஏற்ற இக்கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. இதன் அடிப்பாக கட்டிடம் முதலில் சதுரமாக இருந்தது. பின்பு வட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது.
 • இதனுடைய அடித்தளமானது 9 மீட்டர் அளவாகும்.
 • இதனுடைய கோபுரமானது செப்பு உலோகத்தால் ஆனது.

புதுச்சேரியில் அமைந்துள்ள புதிய கலங்கரை விளக்கத்தின் சிறப்பு:

 • இந்த கலங்கரை விளக்கம் 48 மீட்டர் ஆகும்.
 • இந்த கலங்கரை விளக்கத்தினை பொதுமக்களுக்கு தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பார்வையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
 • இதனை கண்டு ரசிப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ. 10 நுழைவு கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil