ஆன்லைன் மூலம் சிட்டா நகல் பெறுதல்

Advertisement

பட்டா சிட்டா நகல் எடுக்க

வணக்கம் நண்பர்களே.. சிட்டா என்பது பட்டா பதிவேட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒன்று. இது ஒரு நபர் அல்லது நபர்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமை விவரங்களை வழங்குகிறது. சரி இந்த பதிவில் சிட்டா நகல் பெறுதல் எப்படி என்பதை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

ஆன்லைன் மூலம் சிட்டா நகல் பெறுதல்

பட்டா என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். பட்டா என்பது நில வருவாய் பதிவு இது நிலத்தின் உரிமையை நிறுவுவதற்கான ஒரு ஆவணம். ஒரு சொத்தின் உண்மையான உரிமையாளரின் பெயரில் பட்டா இருக்கும். பட்டா பதிவேடு தாலுகா அலுவலகங்களில் பராமரிக்கப்படும் மேலும் அனைத்து நில உடைமைகளின் உரிமை விவரங்களும் இவற்றில் இருக்கும்.

பட்டாவில் நிலம் அமைந்திருக்கும் மாவட்டத்தின் பெயர், வட்டம் மற்றும் கிராமத்தின் பெயரும் பட்டாவின் எண்ணும் இடம்பெற்றிருக்கும். மேலும் அந்த நிலத்தின் உரிமையாளர் பெயர் அவரது தந்தையார் பெயரோடு இடம்பெற்று இருக்கும். நஞ்சை நிலமா அல்லது புஞ்சை நிலமா என்ற விவரமும், நிலத்தின் பரப்பு விவரம், தீர்வை தகவல்கள் ஆகியவை இருக்கும். அடுத்ததாக சிட்டா என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சிட்டா என்றால் என்ன?

சிட்டா என்பது பட்டா பதிவேட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒன்று. இது ஒரு நபர் அல்லது நபர்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமை விவரங்களை வழங்குகிறது. பட்டாவை சரிபார்ப்பதற்கு கூட சிட்டா பயன்படுகிறது இந்த சிட்டாவை ஆன்லைன் மூலம் நகல் பெறுதல் எப்படி என்பதை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

ஸ்டேப்: 1

முதலில் தமிழக அரசின் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் வழங்கும் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.

ஸ்டேப்: 2

அதில் உள்ள நில உரிமை (பட்டா & புலப்படம் /சிட்டா /நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 3

அடுத்து வரும் புதிய பக்கத்தில் உங்கள் மாவட்டம் மற்றும் பகுதி வகை கிராமப்புறமா அல்லது நகரப்புறமா என்பதை தேர்வு செய்து சமர்பிக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான விவரங்களை கொடுக்க வேண்டும். அதில் மாவட்டம், வட்டம், நகரம், நிலத்தின் புல எண் மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்து சமர்பிக்க வேண்டும். இத்தகைய விவரங்களை உள்ளிட்டு ஆன்லைன் மூலம் சிட்டா நகல் பெறலாம்.

தொடர்புடைய பதிவுகள் 
ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன?
பட்டா சிட்டா ஆன்லைனில் பெறுவது எப்படி..!
ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement