திருக்குறளின் வேறு பெயர்கள் | Thirukkural Other Names in Tamil

Thirukkural Other Names in Tamil

திருக்குறளின் வேறு பெயர்கள் யாவை? | Thirukkural Names in Tamil

மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் தோன்றி, பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது திருக்குறள். திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இவர் ஒன்று இரண்டு குறள் அல்ல, மொத்தம் 1330 குறட்பாக்களை எழுதியுள்ளார். இதில் ஒவ்வொரு குறளுமே தனித்தனியான விளக்கங்களை கொண்டுள்ளது. திருக்குறள் மக்களால் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. அதில் நமக்கு ஒரு சில பெயர்கள் மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் திருக்குறள் 44 பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது என ஒரு சில ஆய்வுகள் சொல்கிறது. நாம் இந்த பதிவில் திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களையும், அந்த பெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

திருக்குறளின் சிறப்பு பெயர்கள் | Thirukkural Names in Tamil:

  1. பொய்யாமொழி
  2. வாயுரை வாழ்த்து
  3. தெய்வநூல்
  4. பொதுமறை
  5. முப்பால்
  6. தமிழ் மறை
  7. முப்பானூல்
  8. திருவள்ளுவம்

திருக்குறளின் வேறு பெயர்கள்: 

திருக்குறளின் வேறு பெயர்கள்
பெயர்  காரணம் 
முப்பால் மூன்று பிரிவுகளை கொண்டதால் இந்த பெயரை பெற்றுள்ளது (அறம், பொருள், இன்பம்) 
திருக்குறள் புனிதமான குறளை உடையது 
தெய்வ நூல், தெய்வமாமறை தெய்வத்தன்மை கொண்ட நூல் 
பொய்யாமொழி குற்றமில்லாத குறள் 
வாயுறை வாழ்த்து
தமிழ் மறை தமிழில் அமைந்துள்ள வேத நூல் 
பொது மறை பாகுபாடின்றி பொதுவாக அமைந்த நூல் 
தமிழ் மனு நூல் தமிழின் வாழ்வியலை எடுத்துரைக்கும் நூல்
திருவள்ளுவப் பயன்
வள்ளுவப்பயன்
திருவள்ளுவரின் பங்களிப்பை போற்றும் விதமாக அழைக்கப்படுகிறது 

Thirukkural Sirappu Peyargal in Tamil:

திருக்குறளின் வேறு பெயர்கள் என்ன
பெயர்  காரணம் 
திருவள்ளுவர் 
பொருளுரை அர்த்தமுள்ள நூல் 
முதுமொழி, பழமொழி பழமையான மொழிகளை கொண்டுள்ளது 
ஒன்றே முக்காலடி, ஈரடி நூல் ஒன்றே முக்காலடியில் அமைந்த நூல், இரண்டு வரிகளில் ஆன நூல்
இயற்றமிழ், முதுமொழி
உள்ளிருள் நீக்கும் ஒளி அகவிருளை அகற்றும் உள்ளொளி
மெய்ஞ்ஞான முப்பால் தெய்வீக ஞானமளிக்கும்உணவு
இருவினைக்கு, மாமருந்து கர்ம வினைகளைத் தீர்க்கும் மாமருந்து
வள்ளுவர் வாய்மொழி வள்ளுவரின் வாயால் உரைக்கப்பட்ட நூல்
மெய்வைத்த வேதவிளக்கு உண்மையை உரைக்கும் விளக்கு
தகவினார் உரை
வள்ளுவம்

Thirukkural Other Names in Tamil:

திருக்குறளின் வேறு பெயர்கள் என்னென்ன
பெயர்  காரணம் 
பால்முறை தெய்வ நூல்
வள்ளுவமாலை வள்ளுவரின் மொழி மாலை போன்றது 
வள்ளுவ தேவன் வசனம் மாமனிதர் வள்ளுவரின் எழுத்துகள்
உலகு உவக்கும் நன்னூல்
வள்ளுவனார் வைப்பு வள்ளுவர் அருளிய செல்வங்கள்
திருவாரம்
மெய்வைத்த சொல் சத்தியம் உரைக்கும் நூல்
வான்மறை பிரபஞ்ச நூல்
பிணக்கிலா வாய்மொழி
வித்தக நூல் வாழ்வியல் வித்தைகளைக் கூறும் நூல்
ஓத்து ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்லும் நூல் 
இரண்டடி 

திருக்குறளின் வேறு பெயர்கள்:

திருக்குறளின் வேறு பெயர்கள் யாவை
பெயர்  காரணம் 
புகழ்ச்சி நூல் புகழ்பெற்ற நூல்
குறளமுது அமிர்தம் போலச் சுவையுடைய குறள்களால் ஆன நூல்
உத்தரவேதம் இறுதியான வேதநூல்
வள்ளுவதேவர் வாய்மை வள்ளுவரின் வாக்கு
கட்டுரை
திருமுறை சத்திய வழி
திருவள்ளுவன் வாக்கு வள்ளுவர் உரைத்த வாக்கு
எழுதுண்ட மறை எழுத்தாக்கப்பட்ட வேதம்
அறம் 
குறள் 
முப்பானூல்
மூன்று பிரிவுகளாலான நூல்

 

திருக்குறள் இயல்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil