வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருக்குறளின் சிறப்புகள் பற்றி தெரியுமா.? | Thirukkural Sirappugal in Tamil

Updated On: January 23, 2025 6:22 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

 திருக்குறளின் சிறப்புகள் | Thirukuralin Sirappu in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருக்குறளின் சிறப்புகளை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். திருக்குறளில் எண்ணிலடங்கா சிறப்புகள் உள்ளது. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒவ்வொரு திருக்குறளும் விளக்குகிறது. மொத்தம் 1330 திருக்குறள் இருக்கிறது என்றும் திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் என்பது நம் அனைவரும் அறிந்தே ஒன்றே.

ஆனால், திருக்குறளில் நமக்கு தெரியாத பல்வேறு சிறப்புகள் அடங்கியிருக்கிறது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவு அமையும்.

Thirukuralin Sirappu in Tamil: 

 திருக்குறள் சிறப்புகள் 10 Points

திருக்குறள் என்பது உலக பொதுமறை நூலாக அனைவராலும் கருதப்படும் சிறந்த நூலாக விளங்குகிறது. இந்த நூலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோன்றியதாக கூறப்படுகிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இவர் ஒன்று இரண்டு குறள் அல்ல, மொத்தம் 1330 குறட்பாக்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பதிவில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் சிறப்புகள், ஆண்டு, நூற் குறிப்பு, பல மொழிகளில் திருக்குறளின் சிறப்பு, திருக்குறளின் பெருமை போன்ற சிறப்புகளை படித்தறிவோம் வாங்க..!

திருக்குறள் அதன் அர்த்தம்

திருக்குறள் நூல் குறிப்பு:

திருக்குறள் நூல் குறிப்பு

thirukkural nool kurippu in tamil: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூலானது உலக புகழ்பெற்ற தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருக்குறளானது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை நூலாகவும் இருக்கிறது. திருக்குறள் சங்க இலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கின்றது. திருக்குறள் திருவள்ளுவரின் சுய சிந்தனை திறனால் எழுதப்பட்டது. 1812-ஆம் ஆண்டு திருக்குறள் நூலானது முதல் முதலாக அச்சிடப்பட்டது. அதன் பிறகு இதன் அருமை பெருமை காரணமாக உலகறிய வைக்க ஆங்கிலத்தில் 1840-ஆண்டு அச்சிடப்பட்டது. 1730 முப்பதாம் ஆண்டு ஐரோப்பிய மக்களுக்கு கவிஞர் வீரமாமுனிவர் லத்தின் மொழியில் திருக்குறளை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலத்தில் முதன்முதலாக திருக்குறளின் கருத்துக்களை அறிமுகப்படுத்தியவர் கிண்டர்ஷிலே. அறத்துப்பால் இன்பத்துப்பால் பொருட்பால் ஆகிய முப்பாலும் சேர்த்து மொத்தம் 133 அதிகாரங்களும், 1330 குறள்கள் உள்ளன. திருக்குறளை திருவள்ளுவர் 14000 சொற்களில் பாடியுள்ளார்.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம்:

திருக்குறள் இயற்றப்பட்ட காலம்

திருக்குறளின் சிறப்புகள்: திருக்குறள் கி.மு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சிறப்பு வாய்ந்த நூல். தமிழ்நாட்டில் ஆண்டுகளை குறிப்பிட மறைமலை அடிகள் நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் திருவள்ளுவர் வருடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் ஆண்டானது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

 

திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்

திருக்குறளுக்கு உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், பொதுமறை, முப்பால், தமிழ்மறை, ஈரடிநூல், வானம்மறை, உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து, முப்பால் என்று பல சிறப்பு பெயர்கள் உள்ளன. 

திருவள்ளுவர் இயற்றிய நூலுக்கு திருக்குறள் என பெயர் ஏன் வந்தது?

 thirukkural sirappugal in tamil

About Thirukkural in Tamil: திருக்குறளில் உள்ள அனைத்து நூல்களும் குறள் வெண்பாக்களால் ஆனதால் குறள் என்றும் அதன் உயர்ந்த நிலை கருதி திரு என்ற அடைமொழியுடன் திருக்குறள் என பெயர் பெற்றது. குறுகிய செய்யுள் என்பதே “திருக்குறள்” ஆகும்.

திருக்குறல் நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் குறள் வெண்பா எனும் வெண்பா வகையைச் சேர்ந்தது. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆன முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். இந்த நூலினை உலக மக்கள் அனைவராலும் உலக பொதுமறை நூலாக போற்றப்படுகிறது.

திருக்குறள் அனைத்தும் இரண்டு அடிகளில் உலகத் தத்துவத்தை முழுவதும் தெளிவாக சொன்னதால் ஈரடி நூல் என்றும், அறம் பொருள் இன்பம் அல்லது காமம் எனும் முப்பிரிவுகளைக் கொண்டதால் முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.

10 எளிமையான திருக்குறள்

உலக பொதுமறை நூலின் பிரிவுகள்:

உலக பொதுமறை நூலின் பிரிவுகள்

திருக்குறள் நூலானது முப்பாலான அறம் பொருள், இன்பம் என மூன்று பாக்களை கொண்டுள்ளது. முப்பால்களும் இயல் என்று பிரிக்கப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்களில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 பாடல்கள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது.

அறத்துப்பால்: முதற் பாலான அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன. பாயிரவியல் 4 அதிகாரங்களும், பாயிரவியல்-ஐ தொடர்ந்து முதல் 20 அதிகாரங்களுடன் இல்லறவியல் அடுத்து 13 அதிகாரங்கள் கொண்ட துறவறவியல் இறுதியில் ஊழ் என்னும் அதிகாரம் கொண்ட ஊழியல். திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் கொண்ட இயல் ஊழியல் மட்டுமே.

பொருட்பால்: பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன அவை, பொருட்பாலில் அரசு இயல் (25 அதிகாரங்களும்), அமைச்சு இயல் (32 அதிகாரங்களும்), ஒழிபு இயல் (13 அதிகாரங்களும்) உள்ளன.

இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால்: இறுதியாக உள்ளது இன்பத்துப்பால். இன்பத்துப்பாலில் (களவியல்) 7 அதிகாரங்களும், (கற்பியல்) 18 அதிகாரங்களும் உள்ளன. இன்பத்துப்பாலில் மொத்தமாக 25 அதிகாரங்கள் உள்ளன.

திருக்குறளின் பெருமைகள் | Thirukkural Perumaigal in Tamil:

திருக்குறளின் பெருமைகள்உலகளவில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள நூல் திருக்குறள். இதுவரை திருக்குறள் நூலை மொத்தமாக 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் பற்றிய வினா விடை

மொழிபெயர்ப்புகள்:

இந்திய மொழி: குஜராத்தி, ஹிந்தி, வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஆசிய மொழி: அரபி, பர்மிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மொழி: செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு மொழி, செருமன், ஹங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, லத்தின், நார்வே மொழி, போலிய மொழி, ரஷ்ய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் பெற்ற தனித்தன்மை:

  1. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
  2. திருக்குறல் முதல்முதலாக அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
  3. திருக்குறளுக்கு வந்த முதல் பெயர் முப்பால்.
  4. திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 38 .
  5. திருக்குறளின் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் 700.
  6. திருக்குறளின் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 270
  7. திருக்குறளில் உள்ள மொத்த குறள் 1330
  8. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  9. திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறள்களும் 2 அடிகள் மற்றும் ஏழு சீர்களை உடையது.
  10. திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 14000.
  11. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42194
  12. திருக்குறளில் மொத்தம் தமிழ் எழுத்துக்கள் 247-ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.
  13. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் அனிச்சம், குவளை.
  14. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சிப்பழம்.
  15. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி.
  16. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஓள.
  17. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் “குறிப்பறிதல்.
  18. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை மரம், மூங்கில்.
  19. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓர் எழுத்து – னி
  20. திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில் அதே குறளில் வருவது பற்று (6 முறை வருகிறது).
  21. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்.
  22. திருக்குறள் நூலுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.
  23. திருக்குறளை ஆங்கில மொழியில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் ஜி.யு போப்.
  24. திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் பரிமேலழகர்.
  25. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது.
  26. திருக்குறளில் ஏழு இடங்களில் இடம்பெற்ற சொல் கோடி.
  27. திருக்குறள் 107 மொழிகளில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  28. திருக்குறளை இதுவரை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
  29. திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி என்ற மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now