பகுபத உறுப்பிலக்கணம் | Pagupatha Urupilakanam

Pagupatha Urupilakanam

பகுபத உறுப்பிலக்கணம் விளக்கம் | Pagupatha Uruppilakkanam Vagaigal in Tamil

பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு இந்த பகுபத உறுப்பிலக்கணம் மிகவும் பயன்படும். பகுபதத்தில் மொத்தம் 6 உறுப்புகள் உள்ளன. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் போன்ற உறுப்புகள் இருக்கிறது. பகுபதம் பெரும்பாலும் வினைமுற்றுகளாக தான் அமைந்திருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதி தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கும் இது மாதிரியான இலக்கணம் சம்பந்த கேள்விகள் மிகவும் பயன்படும். இந்த பதிவில் பகுபத உறுப்பிலக்கணம் விளக்கத்தினை தெரிந்துக்கொள்ளுவோம்..!

இலக்கணம் என்றால் என்ன?
அணி இலக்கணம்

பகுபத உறுப்பிலக்கணம் என்றால் என்ன?

 • பதம் என்றால் சொல்
 • பகுத்தல் – பங்கிடுதல், கூறிடுதல்.
 • பகுபதம் என்றால் கூறிடப்படக் கூடிய சொல் என்று பொருள்.

பகுபதத்தினை பகுபதம், பகாப்பதம் என்று பிரிக்கலாம்.

உதாரணத்திற்கு: “கண்டேன்” என்ற சொல்லினை பிரிக்கலாம். சொல்லினை பிரிக்கக்கூடியதை பகுபதம் என்று கூறுவார்கள்.

“கண்” என்ற சொல்லை பிரிக்க முடியாது. இந்த சொல்லை பகாப்பதம் என்று சொல்வார்கள்.

பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பகுபத உறுப்பிலக்கணத்தில் மொத்தம் 6 உறுப்புகள் இருக்கிறது.

 1. பகுதி
 2. விகுதி
 3. இடைநிலை
 4. சாரியை
 5. சந்தி
 6. விகாரம்

6 உறுப்புகளையும் எடுத்துக்காட்டோடு கூறுகிறோம்:

 பகுபத உறுப்பிலக்கணம்

“வந்தனர்” என்பது ஒரு வினைமுற்று. (வினைமுற்று என்பது பால், எண், திணை)

‘வந்தனர்’ என்ற சொல்லில் ‘வருதல்’ என்ற செயலும், அது நிகழ்ந்து முடிந்தது என்ற ‘இறந்த கால’மும், அதை நிகழ்த்தியவர் பலர் என்ற எண்ணும், அவர்கள் உயர்திணை மக்கள் என்ற குறிப்பும் வெளிப்படையாக தெரிகிறது.

வந்தனர் என்பதில் ‘வா’ என்ற வினைச்சொல் அடிதான் பகுதி. இதில் விகுதி என்ற சொல் இறுதி கூற்றினை கூறுகிறது.

இங்கே “அர்” என்ற விகுதியை குறிப்பது “உயர்திணை பலர்பால் விகுதி” ஆகும். இதனால் வந்தது உயர்திணையாகிய மக்கள், அவர் ஒருவரல்லர் பலர் என்று குறிக்கிறது.

இதுவே பகுபத உறுப்பிலக்கணத்தில் “வந்தான்”, “வந்தாள்”, “வந்தது” ஆகிய சொற்களில் உள்ள விகுதிகளைப் பார்த்தால் ‘உயர்திணை ஆண்பால் ஒருமை’, ‘உயர்திணை பெண்பால் ஒருமை’, ‘அஃறிணை ஒன்றன்பால்’ என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

 

ஆகவே, வினைமுற்று விகுதி நமக்கு திணை, பால், எண் ஆகியவற்றை தருகிறது.

இடைநிலை என்பது பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் வரும் எழுத்துகள், இவை காலத்தை உணர்த்தி வரக்கூடியவை.

‘வந்தனர்’ என்பதில் உள்ள ’த்’ இடைநிலை இறந்த காலத்தை குறிக்கிறது.

‘வருவர்’ என்ற சொல்லின் ‘வ்’ இடைநிலை எதிர்காலத்தையும், ‘வருகின்றனர்’ என்பதின் ‘கின்று’ இடைநிலை நிகழ்காலத்தையும் உணர்த்துகின்றன.

இந்த இலக்கணத்தினை தான் காலம் காட்டும் இடைநிலைகள் என்று சொல்கிறார்கள்.

சாரியை என்பது பொருள் தராத கூறுகள். இவை சொற்களுள் இரண்டு கூற்றுகளை சேர்த்து வைக்க சாரியை இலக்கணம் பயன்படுகிறது. சாரியை இல்லை என்றால் தமிழில் ஒரு இயைபு இருக்காது.

“சந்தி” என்பது புணர்ச்சி வகையை சேர்ந்தது.

பகுதியோடு இடைநிலை சேர்ந்து வந்தாலோ, விகுதியோ சேர்கையில் இடையில் நிகழும் புணர்ச்சி மாற்றம் தான் “சந்தி” என்று சொல்கிறோம்.

வந்தனர் என்பதில் ‘வ’ என்ற பகுதிக்கும் ‘த்’ என்ற இடைநிலைக்கும் இடையில் ‘ந்’ என்ற எழுத்து தோன்றிப் புணர்ச்சி நிகழ்ந்துள்ளது.

வ+த் = வத்த் என்று புணர்ந்து, ‘த்’ மெலிந்து ‘ந்’ ஆகி ‘வந்த்’ என்று ஆகியது. (இதுதான் சந்தி).

விகாரம் என்றால் மாறுபடல். சந்தி நிகழ்கையிலோ பகுதியோ மாறுபடல் விகாரம் எனப்படும்.

வந்தனர் என்ற சொல்லின் பகுதி ‘வா’ என்ற வினைவேர்ச்சொல்லை குறிக்கிறது. ஆனால், சொல்லில் இது ‘வ’ என்று திரிந்து நிற்கிறது, இது விகாரம்.

சந்தியில் தோன்றிய ‘த்’ என்ற எழுத்து ‘ந்’ என்று மாறி நிற்கிறது, இதுவும் விகாரம்.

எடுத்துக்காட்டிற்கு சில பகுபத உறுப்பிலக்கணம்:

 1. அசைத்தஅசை+த்+த்+அ
  அசை – பகுதி;
  த் – சந்தி;
  த் இறந்தகால இடைநிலை;
  அ – பெயரெச்ச விகுதி.
 2. திற – திற+த்(ந்)+த்+உ
  திற – பகுதி;
  த் – சந்தி,
  ’ந்’ ஆனது விகாரம்;
  த் – இறந்தகால இடைநிலை;
  உ – வினையெச்ச விகுதி.
 3. வாழ்த்துவம் – வாழ்த்து+வ்+அம்
  வாழ்த்து – பகுதி;
  வ் – எதிர்கால இடைநிலை;
  அம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.

சரி நண்பர்களே பகுபத உறுப்பிலக்கணம் பிரிப்பதை தெரிந்துக்கொண்டீர்களா. மறக்காமல் மற்ற நண்பர்களுக்கும் ஒரு ஷேர் செய்யுங்கள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil