பட்டா எண் அறிவது எப்படி?

Advertisement

பட்டா சிட்டா சர்வே எண் அறிவது எப்படி? How to Find Patta Chitta Number in Tamil

வணக்கம் நண்பர்களே… உங்களுடைய பட்டா சிட்டா சர்வே எண் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பட்டா சிட்டா சர்வே எண் எதற்காக பயன்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் இடத்தோட வில்லங்கம் பார்க்க ஆன்லைனில் வில்லங்க சான்று (EC) அப்ளை செய்வதற்கும், நிலத்தின் வழிகாட்டி மதிப்பை (Guideline Value) தெரிந்து கொள்வதற்கு, பட்டா/ சிட்டா விவரங்களை ஆன்லைனில் பிரிண்ட் அவுட் எடுத்து பார்ப்பதற்கு பட்டா, சிட்டா, சர்வே, Subdivision, உங்கள் பத்திரத்தின் ஆவண எண் ஆகிய எண்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சரி இந்த பதிவில் பட்டா சிட்டா சர்வே எண் அறிவது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம் வாங்க.

பட்டா சிட்டா சர்வே தெரிந்து கொள்வது எப்படி?

உங்கள் நில பத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் பட்டா சிட்டா சர்வே எண் எப்படி பார்ப்பது என்பதை பற்றி கீழ் கொடுக்கப்பட்டுள்ள படங்களில் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பட்டா எண் அறிவது எப்படி?

உங்களது நில பத்திரத்தை அதாவது சொத்து விபரம் என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல், உங்களது சொத்து விபரத்தில் பட்டா எண் கொடுக்கப்பட்டிருக்கும். அது தான் பட்டா எண்.

சர்வே எண் அறிவது எப்படி? (Survey No):

உங்களது நில பத்திரத்தை அதாவது சொத்து விபரம் என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல், உங்களது சொத்து விபரத்தில் க.ச எண் அதாவது சர்வே எண் கொடுக்கப்பட்டிருக்கும். அது தான் சர்வே எண்.

பத்திரத்தின் ஆவண எண் அறிவது எப்படி? (Document No):

உங்களது நில பத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல், உங்களது சொத்து விபரத்தில் பத்திரத்தின் ஆவண எண் (Document No) கொடுக்கப்பட்டிருக்கும். அது தான் Document No.

குறிப்பு:

பட்டா பற்றிய விவரங்களை தெரிஞ்சுக்கிறதுக்கு ஒரு வெப்சைட் இருக்கிறது அந்த வெப்சைட்டில் உங்களுடைய ப்ராப்பர்ட்டி பத்தின விவரங்களை உள்ளீடு செய்தால் உங்க ப்ராப்பர்ட்டிக்கான பட்டா எண் எல்லாமே நீங்க தெரிஞ்சுக்கலாம்.

தொடர்புடைய பதிவுகள் 
ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன?
பட்டா சிட்டா ஆன்லைனில் பெறுவது எப்படி..!
ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement