பாட்டி சொன்ன விடுகதைகள் | Paatti Riddles in Tamil With Answers
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் (patti vidukathaigal) பாடி விடுகதைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். விடுகதை என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. விடுகதைகள் நமக்கு சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் உருவாக்கப்பட்டது. ஒரு சில விடுகதைகள் கடினமான கேள்விகளை கொண்டிருக்கும். இந்த பதிவில் உங்களை யோசிக்க வைக்கவும், சிரிக்க வைக்கவும் கூடிய நம் பாட்டி சொன்ன விடுகதைகள் உள்ளன. அதை நீங்களும் உங்கள் குழந்தைகளும் படித்து மகிழுங்கள். சரி வாங்க பாட்டி சொன்ன விடுகதைகளை படித்து தெரிந்து கொள்ளலாம்.
பாட்டி விடுகதைகள்:
- ஒரு குளத்தில் ஒவ்வொரு பூவிலும் ஒரு கிளி உட்கார்ந்தால் ஒரு கிளிக்கு பூ கிடைக்காது, ஒரு பூவுக்கு இரண்டு கிளிகள் உட்கார்ந்தால் ஒரு பூ மீதம் உள்ளது. அப்படியெனில் எத்தனை கிளிகள், எத்தனை பூக்கள் குளத்தில் இருந்திருக்கும்.
விடை: மூன்று பூக்கள், நான்கு கிளிகள்
2. அங்கமுத்து வாசலிலே தங்கமுத்து காயுது. அதை எடுத்து வாயில போட்டா திக்கு முக்கலாடுது அது என்ன?
விடை: மிளகாய்
3. கிணற்று நிறைய தண்ணீர் இருக்கும். குருவி குடிக்க தண்ணீர் இல்லை அது என்ன?
விடை: தேங்காய்
4. மலையிலிருந்து வாங்கி வந்த இரண்டு மாட்டில் கருப்பு மாடு தண்ணில போயிடுச்சு, வெள்ளை மாடு வீட்டுக்கு வந்துருச்சு அது என்ன?
விடை: உளுந்து
5. வேலிக்குள்ள வெண்கலக் குண்டா அது என்ன?
விடை: நிலா
Paatti Riddles in Tamil With Answers:
6. ஆயிரம் தச்சர் கூடி அமைத்த மண்டபம், ஒருவர் கண் பட்டு உடைந்தது அது என்ன?
விடை: தேன்கூடு
7. ஆள் இறங்காத கிணத்துல மரம் இறங்கி கூத்தாடுது அது என்ன?
விடை: மத்து
8. வேலியை சுத்தி நீலிப்பாம்பு அது என்ன?
விடை: அரைஞாண் கயிறு
9. வாலு நீண்ட குருவி இரை எடுக்குது, ஆனால் இரையை சாப்பிடாது அது என்ன?
விடை: அகப்பை (கரண்டி)
10. அத்துவான காட்டுக்குள்ள இத்துவான் குடை பிடிக்கிறான் அவன் யார்?
விடை: காளான்
10 விடுகதைகள்:
11. அம்மாவோ சும்மா படுத்திருப்பாள், பிள்ளையோ முன்னும், பின்னும் ஓடிக்கொண்டிருப்பாள் அது என்ன?
விடை: அம்மியும், குழவியும்
12. எண்ணும், முள்ளும் இல்லாத கடிகாரம்; எவராலும் பார்க்க முடியாத கடிகாரம் அது என்ன?
விடை: இதயம்
13. தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கிய பேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
விடை: வலை
14. எல்லா நேரத்தையும் தரையில் செலவழிக்கும் ஆனால் அழுக்காகாது?
விடை: நிழல்
15. மண்ணுக்குள்ளே கிடப்பான், மங்களகரமானவன் அவன் யார்
விடை: மஞ்சள்
Patti Riddles in Tamil:
16. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
விடை: கண்கள்
17. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
விடை: நிலா (பௌர்ணமி, அமாவாசை)
18. அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
விடை: நீர்
19. கால் உண்டு நடக்க மாட்டான்; முதுகு உண்டு வளைக்க மாட்டான்; கை உண்டு அசைக்க மாட்டான் அவன் யார்?
விடை: நாற்காலி
பாட்டி விடுகதைகள்:
20. கண் சிமிட்டும் ஒன்று; மணி அடிக்கும் மற்றொன்று; கண்ணீர் வடிக்கும் இன்னொன்று அது என்ன?
விடை: இடி, மின்னல், மழை
21. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது அது என்ன?
விடை: காற்று
22. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்
விடை: கத்தரிக்கோல்
23. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
விடை: விக்கல்
24. பாட்டி வீட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள்
விடை: புடலங்காய்
25. உரச, உரச குழைவான்; பூச பூச மனப்பான் அவன் யார்?
விடை: சந்தனம்
பாட்டி சொன்ன விடுகதை:
26. பிறக்கும் போது வால் உண்டு இறக்கும் போது வால் இல்லை அது என்ன?
விடை: தவளை
27. விடிய விடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம் அது என்ன
விடை: கடிகாரம்
28. படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
விடை: கனவு
29. அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
விடை: நாக்கு
30. ஒரு குகை, 32 வீரர்கள், ஒரு நாகம் அந்த குகை எது?
விடை: வாய்
மேலும் படிக்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள் |
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள் |
குழந்தைகளுக்கான விடுகதைகள் |
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில் |
விடுகதைகள் | Vidukathaigal |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |