புணர்ச்சி விதிகள் என்றால் என்ன? | Tamil Ilakkanam Punarchi Vidhigal
வணக்கம்.. நாம் பள்ளிக்கு சென்ற காலங்களில் நாம் இலக்கணம் பற்றி படித்திருப்போம். இலக்கணம் என்பது நாம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியை பிழையில்லாமல் கற்றுக்கொள்வதற்கு தேவைப்படும் ஒரு விதிகளின் தொகுப்பாகும். இந்த இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி என்று 5 வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஒரு எழுத்து தனித்தோ அல்லது தொடர்ந்தோ பொருள் தருவதை நாம் சொல் என்று அழைக்கின்றோம். பொதுவாக சொற்கள் பல தொடர்ந்து வருவது சொற்றொடர் என்றும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைவதை அல்லது சேருவதை, இலக்கணத்தில் புணர்ச்சி என வழங்குவர். சரி இந்த பதிவில் புணர்ச்சி விதிகள் என்றால் என்ன?, புணர்ச்சி விதிகளின் பயன்கள் மற்றும் சில எடுத்துக்காட்டுகளை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.
புணர்ச்சி விதிகள் என்றால் என்ன?
இலக்கணம் புணர்ச்சி என்பது ஒரு சொல்ல நாம் சொல்லும் போது நிலைமொழியின் இறுதியிலும் வருமொழியன் முதலிலும் ஏற்படும் மாற்றங்களை சுருக்கமாக சொல்லும் வரையறைகளை புணர்ச்சி விதிகள் என்று அழைக்கப்படுகிறது.
புணர்ச்சி விதிகளின் பயன்கள்:
- மொழியை பிழையில்லாமல் பேசுவதற்கும்.
- பாடல் அடிகளை பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்து அறியவும்
மொழி ஆளுமையை புரிந்து கொள்ளவும் இந்தப் புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன.
புணர்ச்சி எடுத்துக்காட்டு | Punarchi Vidhigal Examples:
இயல்பு புணர்ச்சி:
- மா + மரம் = மாமரம் – இது ஒரு இயல்பு புணர்ச்சி ஆகும்.
விளக்கம்:
மாமரம் என்பதில் ‘மா’ நிலைமொழி. ‘மரம்’ என்பது வருமொழி. இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது எந்தவித மாற்றமும் இல்லாமல் இயல்பாகச் சேருவதை (புணருவதை) இயல்புப் புணர்ச்சி என்பர்.
தோன்றல் விகாரம் எடுத்துக்காட்டுகள்
- அவரை + காய் = அவரைக்காய் – தோன்றல்
விளக்கம்:
அவரை + காய் = ‘அவரைக்காய் ’ என்பதில், ‘க்’ என்னும் ஓர் எழுத்துத் தோன்றிப் புணர்ந்துள்ளது. ஆகவே இது ஒரு தோன்றல் விகாரம் ஆகும்.
திரிதல் விகாரம் எடுத்துக்காட்டு
- மண் + குடம் = மட்குடம் – திரிதல் அதாவது ண்-ட் ஆனது..
விளக்கம்:
மண்+குடம் = ‘மட்குடம்’ என்பதில் ஓர் எழுத்துத் திரிந்து புணர்ந்துள்ளது. ஆகவே இது ஒரு திரிதல் விகாரம் ஆகும்.
கெடுதல் புணர்ச்சி எடுத்துக்காட்டு:
- மரம் + வேர் = மரவேர்… (ம்) கெட்டது.
- பெருமை + வள்ளல் = பெருவள்ளல்… (மை) கெட்டது.
- பெருமை + நன்மை = பெருநன்மை… (மை) கெட்டது.
விளக்கம்:
முதலாவதாக கூறப்பட்டுள்ள மரவேர் என்பதற்கான விளக்கம் மரம்+வேர் = ‘மரவேர்’ என்பதில் (ம்) ஓர் எழுத்துக் கெட்டுப் புணர்ந்துள்ளது.
இவ்வாறு தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய மாற்றங்களை (விகாரங்களை) உள்ளடக்கிய புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி எனப்படும்.
இதேபோல், உயிரீற்றுப் புணர்ச்சி விதி, குற்றியலுகரப் புணர்ச்சி விதி, பல, சில என்னும் சொற்களின் புணர்ச்சி விதி, திசைப்பெயர்ப் புணர்ச்சி விதி, பூப் பெயர்ப் புணர்ச்சி விதி, பண்புப் பெயர்ப் புணர்ச்சி விதி, மெய்யீற்றுப் புணர்ச்சி விதி எனப் பல புணர்ச்சி விதிகள் உள்ளன. அவற்றிற்கான எடுத்துக்காட்டுகளை பற்றியும் கீழ் படித்தறிவோம்..
புணர்ச்சி விதிகள்:-
புணர்ச்சி விதிகள் எடுத்துக்காட்டு | |
மணி + அழகு = மணியழகு | உடம்படுமெய்ப் புணர்ச்சி |
கருத்தோடு + இசைந்து = கருத்தோடிசைந்து | குற்றியலுகரப் புணர்ச்சி |
பல + கலை = பல்கலை | பல, சில – புணர்ச்சி விதி |
பூ + கொடி = பூங்கொடி | பூப்பெயர்ப் புணர்ச்சி |
செம்மை + தமிழ் = செந்தமிழ் | பண்புப்பெயர்ப் புணர்ச்சி |
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு | திசைப்பெயர்ப் புணர்ச்சி |
தொடர்புடைய பதிவுகள் – லிங்கை கிளிக் செய்து படித்து பெறுங்கள் |
இலக்கணம் என்றால் என்ன? |
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
வினா எத்தனை வகைப்படும்? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |