புதிர் வினா விடைகள்

Puthir Vidukathai in Tamil

புதிர் விடுகதை வினா விடைகள் | Puthir Vidukathai in Tamil

வணக்கம்.. பொதுவாக விடுகதை என்றாலே அனைவருக்குமே பிடிக்கும். விடுகதை என்றால் போதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி கேள்வியை கேட்பார்கள் அல்லது அந்த கோர்க்கான பதிலை சொல்வார்கள். அந்த வகையில் இந்த பதிவில் உங்களுக்க சில புதிர் விடுகதை வினா விடைகளை பதிவு செய்துள்ளோம். அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.

Puthir Vidukathai in Tamil:

வந்தால் கொண்டாட்டம் வராவிட்டால் திண்டாட்டம் அது என்ன?

  • விடை: மழை 

கை இருக்கு பிடிக்க முடியாது, கால் இருக்கு நடக்க முடியாது அது என்ன?

  • விடை: நாற்காலி

இரவல் கிடைக்காதது இரவில் கிடைக்கும் அது என்ன? 

  • விடை: தூக்கம்

கடல் இருக்கும் நதி இருக்கும் தண்ணீர் இருக்காது – நாடு இருக்கும் ஊரும் இருக்கும் வீடு இருக்காது அது என்ன?

  • விடை: உலக வரைப்படம்

வாரி வாரி வழங்குவான் வெளிச்சம் அதை வாங்கத்தான் ஆளில்லை அவன் யார்?

  • விடை: மின்னல்

மரத்துக்கு மரம் தாவும் குரங்கு அல்ல பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார்?

  • விடை: அணில் 

மழையில் பூக்கும் பூ அது என்ன?

  • விடை: குடை

பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன் யார்?

  • விடை: நாய் 

நீண்ட உடம்புக்காரன் நெடுந்தூரப் பயணக்காரன் அவன் யார்?

  • விடை: தொடர்வண்டி 

உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?

  • விடை: எறும்பு 

காற்றாடி பறப்பது எப்படி?
கல்வி வளர்வது எப்படி?

  • விடை: நூலால் 
மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்
விடுகதைகள் | Vidukathaigal
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
குழந்தைகளுக்கான விடுகதைகள்
விடுகதை விளையாட்டு விடைகள்
கணக்கு விடுகதைகள்
தமிழ் விடுகதைகள் 400 With Answer
தொடர்புடைய பதிவுகள் 
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்..!
அறிவியல் விடுகதைகள்
பாட்டி விடுகதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil