புனித வெள்ளி 2022 | Good Friday 2022 in Tamil

What is Good Friday in Tamil

புனித வெள்ளி சிறப்புகள் | Punitha Velli Sirappugal in Tamil

Good Friday in Tamil: மனிதர்கள் தங்களுடைய கவலையை மறந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், தங்களின் அன்பை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதற்கும் பண்டிகைகள் உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது. பண்டிகைகள் மூலம் தான் மக்களிடம் உள்ள ஒற்றுமை அதிகம் வெளிப்படும். இதில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியான பண்டிகைகள் உள்ளது. இந்துக்களுக்கு பொங்கல், தீபாவளி etc.., கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ், புனித வெள்ளி, முஸ்லிம்களுக்கு ரம்ஜான், மொஹரம் போன்ற பல பண்டிகைகள் இந்த நாட்டில் உள்ளது. ஒவ்வொரு பண்டிகைக்கும் நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் புனித வெள்ளி எதற்காக கொண்டாடப்படுகிறது மற்றும் அதை பற்றிய ஒரு சில குறிப்புகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

புனித வெள்ளி 2022:

  • இந்த பண்டிகை வெள்ளிக்கிழமை 15-ம் தேதி (15.04.2022) வருகிறது.

புனித வெள்ளி என்றால் என்ன?

  • What is Good Friday in Tamil: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் தான் புனித வெள்ளி.
  • புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான நாளாகும். இயேசு சிலுவையில் மரித்ததையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்த புனித வெள்ளி கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்.

புனித வெள்ளி – Good Friday in Tamil:

  • இயேசுவின் சீடரான யூதாஸ் 30 வெள்ளி காசுக்காக இயேசுவை காட்டி கொடுத்தார். பின் எருசேலத்தில் உள்ள காவலர்களால் இயேசு கைது செய்யப்பட்டார். இயேசு முள் கிரீடத்தை அணிந்து கொண்டு, சிலுவையை சுமந்து கல்வாரிக்கு சென்றார், அங்கு அவர் பல துன்பங்களையும் அடைந்தார். பின் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார்.
  • இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்று கூறப்படுகிறது. மீண்டும் இயேசு ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் என்றும் வரலாறு கூறுகிறது, அதனால் இயேசு உயிர் நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேயாகவும் கொண்டாடி வருகின்றனர்.

புனித வெள்ளி 7 வார்த்தைகள்:

  • Punitha Velli Varthaigal: இயேசு கூறிய கடைசி ஏழு வார்த்தைகள்
  • முதல் வார்த்தை: “…பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே…” (லூக்.23:34)
  • இரண்டாவது வார்த்தை: “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்…” (லூக்கா 23:43)
  • மூன்றாவது வார்த்தை: “…ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். …அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26,27)
  • நான்காவது வார்த்தை: “…என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்…” (மத்தேயு 27:46)
  • ஐந்தாவது வார்த்தை: “தாகமாயிருக்கிறேன்…” (யோவான் 19:28)
  • ஆறாவது வார்த்தை: “…முடிந்தது” என்று சொல்லி அவர் தன் ஜீவனை விட்டார் (யோவா.19:30).
  • ஏழாவது வார்த்தை: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்…”
தமிழ் பைபிள் வசனங்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil